மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி - சிறப்பு தொகுப்பு!
Sep 21, 2026, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 21, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிய நிலையில், அக்கட்சி அதன் அடையாளத்தை இழந்து நிற்கிறது. இந்தச் சூழலில் மம்தா பானர்ஜி ஆதரவு வேட்பாளர் ஒருவர் இடைத்தேர்தலில் இருந்து பின்வாங்கிய 3 மணிநேரத்தில், மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தது அம்மாநில அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்…

மேற்குவங்கத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, படுதோல்வியை சந்தித்ததால், மம்தாவுக்கு எதிராக ரிதபிரத பானர்ஜி தலைமையில், மூன்றில் இருபங்கு எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி, தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில் மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி போட்டியிட்டு வென்ற 2 தொகுதிகளில் ஒன்றான நந்திகிராம் தொகுதியிலும், ஆம் ஜனதா உன்னாயன் கட்சித் தலைவர் வென்ற ரெஜிநகர் தொகுதிக்கும் அடுத்த மாதம் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே நிலையில், உள்கட்சி பூசல் காரணமாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பெயரையும், மலர் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. மேலும், மம்தா பானர்ஜி அணிக்கு “மம்தா அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ்” என்ற பெயருடன், கால்பந்து சின்னத்தையும், அதிருப்தி அணிக்கு “ஜனநாயக திரிணாமூல் காங்கிரஸ்” என்ற பெயருடன் அஞ்சல் உறையையும் சின்னமாக தேர்தல் ஆணையம் அளித்திருக்கிறது.

இது, ஏறத்தாழ 28 ஆண்டுகளாக கட்சியைக் கட்டி ஆண்ட மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய பெயர் மற்றும் சின்னத்துடன் தேர்தலில் களம் காண்பது கடினம் என்பதை உணர்ந்த மம்தா பானர்ஜி, இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். இதனால் ரெஜிநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த மம்தா ஆதரவு வேட்பாளரான ரபியுல் ஆலம் செளத்ரி, தனது வேட்புமனுவை திரும்ப பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் பேசி அவரது ஆலோசனையின்பேரில் தான் வேட்புமனுவை வாபஸ் பெற்றதாக செய்தியாளர்களிடம் கூறிய ரபியுல் ஆலம், அடுத்த 3 மணிநேரத்தில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியை அளித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் தீவிர விசுவாசியான ரபியுல் ஆலமின் இந்த முடிவு, காங்கிரஸுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க 19 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கில், நந்திகிராம் தொகுதியில் மம்தா அணி சார்பில் களமிறங்கி, பின்னர் வேட்புமனுவை வாபஸ் பெற்ற சஞ்சிதா பிரதான் டே (Sanchita Pradhan Dey) என்ற பெண் வேட்பாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

முன்னதாக மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியை சஞ்சிதா சந்தித்து பேசியது, அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பியது. மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக சஞ்சனா தரப்பில் சொல்லப்பட்டாலும், அவர் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்றதற்கு இந்தச் சந்திப்பும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என மம்தா கருதினார்.

இதனால்தான், எந்த காங்கிரஸை எதிர்த்து 28 ஆண்டுகளுக்கு முன் திரிணாமூல் காங்கிரஸை மம்தா தொடங்கினாரோ, இன்றைக்கு அதே காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடைந்து, நந்திகிராம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மிலான் பிரதானுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

நந்திகிராமில் இந்த நிலைமை என்றால், ரெஜிநகரில் மம்தாவின் உத்தரவை மீறி, ரபியுல் ஆலம் மீண்டும் தேர்தல் களம் புகுந்திருக்கிறார். ஏற்கெனவே இண்டி கூட்டணியின் தலைமை பொறுப்புக்கு சரத் பவாருடன் சேர்ந்து மம்தாவின் பெயரும் அடிபட்ட நிலையில், அவரது மாறுபட்ட செயல்பாடு காங்கிரஸுக்கு தீராத தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags: West Bengal byelectionsRitabrata BanerjeeAam Janata Unnayan PartybjpElection commissionTrinamool CongressMamata Banerjee
Share
Tweet
SendShare
Previous Post

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

Related News

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies