கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையினால் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய உதவியாளர் சங்கர் வீடு உட்பட 7 இடங்களில் தற்போது வருமான வரித்துறையினரும், அமலாக்கத்துறையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.
அம்பாள் புரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கரின் வீடு , செங்குந்தர்புரத்தில் உள்ள இளந்தளிர் நிதிநிறுவனம் மற்றும் சின்ன ஆண்டான் கோயில் பகுதியில் உள்ள அமைச்சருக்கு நெருக்கமான தனலட்சுமி மார்பிள்ஸ் நிறுவனம் , அதன் உரிமையாளர் வீடு என 4 இடங்களில் வருமான வரித்துறையினரும், அமலாக்கத்துறையினரும் சோதனை நடத்தி வருகின்றனர். சங்கர் வீட்டில் இல்லாததால் வீட்டின் உரிமையாளர் முன்னிலையில் நேமநாதன் முன்னிலையில் பூட்டை உடைத்து சோதனை நடத்தினர் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பில் இச்சோதனை நடந்து வருவது குறிபிடத்தக்கது.