நீங்கள் இந்தியாவே அல்ல: காங்கிரஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்: ராகுலுக்கு ஸ்மிருதி இரானி பதிலடி!
Jul 17, 2026, 01:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீங்கள் இந்தியாவே அல்ல: காங்கிரஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்: ராகுலுக்கு ஸ்மிருதி இரானி பதிலடி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 9, 2023, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்த நிலையில், நீங்கள் இந்தியாவே அல்ல, காங்கிரஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்திருக்கிறார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான 2-வது நாளான இன்றும் விவாதம் நடந்து வருகிறது.

தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று காலை பேசிய ராகுல் காந்தி, “நான் அதானி பற்றி பேசமாட்டேன். ஆகவே, பா.ஜ.க. நண்பர்கள் பயப்பட வேண்டாம். நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிப்பூர் சென்றிருந்தேன். ஆனால், பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை. அப்படியானால், மணிப்பூரை நாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் கருதவில்லையா? என்று பேசினார்.

ராகுல் காந்தி பேசிக்கொண்டிருக்கும்போதே, மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ எழுந்து குறுக்கிட்டு ராகுல் காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுலுக்கு எதிராக குரல் கொடுத்தனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் கோஷமிட, அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

இதன் பிறகு பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை குறித்தும், பில்வாரா பலாத்காரம் குறித்தும் பேச மறுப்பது ஏன்? அதேபோல, காஷ்மீரில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த கிரிஜா திக்கு கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்தும் ராகுல் பேசாதது ஏன்?

மணிப்பூர் பிளவுபட்டு விட்டதாக ராகுல் காந்தி கூறியிருக்கிறார். மணிப்பூர் பிளவுபடவில்லை. அது இந்தியாவின் ஒரு பகுதி. அதை இந்தியாவிடமிருந்து ஒருபோதும் பிரித்து விட முடியாது. மணிப்பூரைக் காட்டிலும் காஷ்மீரில் நடந்த இனப்படுகொலை மிகவும் கொடூரமானது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகுதான் பெண்கள் காஷ்மீரில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். 1990-களில் காஷ்மீர் பண்டிட்கள் எதிர்கொண்ட கொடுமைகளுக்கு நீதிகேட்டு அவர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் இந்தியாவே அல்ல. காரணம், இந்தியா என்பது ஊழல் அல்ல. இந்தியா என்பது உயர் விழுமியங்களைக் கொண்டது. வாரிசு அரசியலைக் கொண்டது அல்ல. ஊழல் பற்றி பேசும்போது, உங்கள் கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வை சற்று யோசித்துப் பாருங்கள். ஊழலும், வாரிசு அரசியலும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். ஆகவே, காங்கிரஸ் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்மிருதி இரானி.

Tags: bjpSmriti IraniMinister Smriti IraniSmriti Irani vs Rahul GandhiModimanipur
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு .

Next Post

இந்தியாவின் 76-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் அமெரிக்க எம்.பி.க்கள்…

Related News

ஊழல் புகாரில் சிக்கினால் பதவி பறிக்கப்படும்; முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்; நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

முறிந்த ஒப்பந்தத்தால் உக்கிரமடையும் ஈரான் போர் : மத்தியஸ்தராக செயல்பட்ட பாகிஸ்தான் முகத்தில் கரி – சிறப்பு தொகுப்பு!

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

ஈரானில் உருவாகும் புதிய அதிகார மையம் : களமிறங்கும் கமேனி பேரன் – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் செயற்கை நிறமிகள் கலந்த கலர் அப்பளம் விற்பனை செய்ய தடை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வருவதை மாநில அரசு தடுக்கக்கூடாது – உச்சநீதிமன்றம்

அமைச்சர் ஆதவ் V/S அன்புமணி – ஏன் திடீர் மோதல்?

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக சுற்றித்திரிந்த அமெரிக்கர் நேபாள எல்லையில் சிறைப்பிடிப்பு – சதித்திட்டம் முறியடிப்பு? : சிறப்பு தொகுப்பு!

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய ஆவணங்கள் கசிந்த விவகாரம் – மத்திய அரசு விசாரணை!

இன்றைய தங்கம் விலை!

செங்கல்பட்டு அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் கைது!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு ரத்து – மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓசூரில் சட்ட விரோதமாக தங்கியருந்த வங்க தேசத்தினர் 73 பேர் சுற்றி வளைப்பு!

முல்லை பெரியாரில் கழிவு நீர் கலக்கும் விவகாரம் : கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு!

செமிகண்டக்டர் துறை வளர்ச்சிக்காக ரூ. 1,27,500 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies