செந்தில் பாலாஜிக்கு 25-ம் தேதிவரை காவல் நீட்டிப்பு: மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!
Jul 23, 2026, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு 25-ம் தேதிவரை காவல் நீட்டிப்பு: மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 12, 2023, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமலாக்கத்துறை விசாரணை நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு, வரும் 25-ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதையடுத்து, அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

2011 – 16 அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த 2 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்த நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில், மறு விசாரணை நடந்து வருகிறது.

இந்த சூழலில், பண மோசடி தொடர்பாக கடந்த மே மாதம் செந்தில் பாலாஜி வீடு உள்பட பல்வேறு இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர், அப்போது, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதோடு, அவர்களது வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தினர். இது ஒருபுறம் இருக்க, பண மோசடி விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக் குமாருக்கும் அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், இருவருமே ஆஜராகவில்லை.

இதையடுத்து, செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் கடந்த மாதம் 13-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனடிப்படையில், 14-ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது, நெஞ்சுவலி, அறுவைச் சிகிச்சை, ஆட்கொணர்வு மனு என பல சம்பவங்கள் அரங்கேறியது. இதனால், இலாகா இல்லாத அமைச்சரானார் செந்தில் பாலாஜி.

பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார்.  அவரை, அமலாக்கத்துறை கடந்த 7-ம் தேதி காவலில் எடுத்து விசாரித்து வந்தது . அப்போது, அதிகாரிகள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு, தெரியாது என்றும், எனக்கு தொடர்பில்லை எனவும் அவர் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், 5 நாள் விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜியை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

மேலும், அவரிடம் 5 நாட்கள் நடத்திய விசாரணை குறித்த குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, வரும் ஆகஸ்ட் 25-ம் தேதிவரை, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: dmk senthil balajiit raids senthil balaji
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் 23 மசோதாக்கள் நிறைவேற்றம்!

Next Post

இறுதிப்போட்டியில் இந்திய ஹாக்கி அணி…

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies