தமிழர்கள் தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்!
Aug 8, 2026, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழர்கள் தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 15, 2023, 04:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழர்கள் தாய்மொழியான தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி இருக்கிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரிலுள்ள இந்திய ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. இவ்விழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசுகையில், “நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. ஏனெனில், எந்தவகையான அறிவையும் புறக்கணிக்காத நாடாக இந்தியா இருக்கிறது. ஆகவே, ஆங்கிலத்துடன் சேர்த்து ஜெர்மன், ப்ரெஞ்ச் போன்ற மொழிகளையும் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல, குஜராத் குழந்தைகள் குஜராத்தியுடன் இந்தியையும், அஸ்ஸாம் குழந்தைகள் அஸ்ஸாம் மொழியுடன் இந்தியையும், தமிழர்கள் தமிழ்மொழியுடன் இந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும். இது நடந்தால் நம் நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது. மேலும், இந்த 4 பாடங்களுடன் சமஸ்கிருத மொழியும் கற்றுத்தரப்படுகிறது. இதையும் மாணவர்கள் கூடுதலாக கற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், உலகம் முழுவதிலும் உள்ள அறிவுக்களஞ்சியம் நமது வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் சமஸ்கிருதம் மட்டும்தான். இதை கற்பவர்கள் வாழ்க்கையில் எந்தப் பிரச்னை வந்தாலும், அது ஒரு பிரச்னையாகவே இருக்காது. காரணம், அறிவு எங்கிருந்து வந்தது என்பதுப் பற்றி சிந்திக்காமல் நல்ல எண்ணங்களை உள்வாங்க வேண்டும் என்று வேதங்கள் போதிக்கின்றன.

அறிவு எங்கிருந்து வந்தாலும், அது நம் சமுதாயம், மக்கள், உலகம் மற்றும் பிரபஞ்சத்தின் நலனுக்கானதா என்பதை பார்க்க வேண்டும். அதில் நவீன பரிமாணத்தையும் சேர்க்க வேண்டும். அறிவு மற்றும் அறிவியல் துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றை புரிந்துகொண்டு இரண்டையும் ஒருங்கிணைத்து முழுமையான கல்வி முறையை உருவாக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நம் வரலாறு, இலக்கணம், இலக்கியங்கள் தாங்கியுள்ள தாய்மொழியை பாதுகாப்பது உங்களது கடமையாகும். இதனால்தான், புதிய கல்விக்கொள்கை 2020-ல் குழந்தைகளுக்கு தாய்மொழியை பயிற்றுவிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

Tags: TamilAmitshahlanguageAmitshah Speech
Share
Tweet
SendShare
Previous Post

மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை: வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன்: பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

காங்கிரஸ் கட்சியின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள்: அனுராக் தாக்கூர்!

Related News

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies