அமைச்சர் பொன்முடி வழக்கு: ஆகஸ்ட்  22ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
Jan 23, 2026, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் பொன்முடி வழக்கு: ஆகஸ்ட்  22ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கு  விசாரணை வருகின்ற ஆகஸ்ட்  22ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 17, 2023, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக கடந்த 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருக்கும் போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த போது பொன்முடி, கூடுதலாகக் கனிமவளத் துறைக்கும் அமைச்சராக இருந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர்  தாலுகா பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதில்  அரசுக்கு 28  கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு  தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி, திமுக நிா்வாகிகள் கோதகுமாா், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 போ் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

11 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகளின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று  நடைபெற்றது. அப்போது சதானந்தன், கோத குமார், ஜெயச்சந்திரன், கோபி நாத் ஆகிய 4 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி எம்.பி., ராஜ மகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர்.

மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 67 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. முதல் சாட்சியும், வழக்கின் புகார்தாரரும், முன்னாள் தாசில்தாரும் ஆன குமாரபாலன், உடல்நிலை சரியில்லாததால், சக்கர நாற்காலியில் வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் அவர் நீதிபதி முன்னிலையில் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெறும் என்று நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற கௌதம சிகாமணி, ராஜ மகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை எனவே  வருகின்ற ஆகஸ்ட்  22ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Tags: PonmudiMinister PonmudiMP Gouthama SikhamaniGouthama Sikhamani
ShareTweetSendShare
Previous Post

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிக்கு டெண்டர்: மத்திய அரசு அறிவிப்பு

Next Post

“இந்தியா பாரம்பரிய மருத்துவத்தின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது!”-உலகச் சுகாதார அமைப்பின் தலைவர்

Related News

பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வணங்கினர்!

காதல் விவகாரம் – போலீசார் முன்னிலையில் பெண்ணை கடத்த முயன்ற உறவினர்கள்!

ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன் பெண் நூதன போராட்டம்!

நெசவாளர்களுக்கு மத்திய அரசின் அங்கீகார அடையாள அட்டைகள்!

புதிய அரசுப் பதவிகளுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான முன்னுரிமை!

கேரள வளர்ச்சிக்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

மக்களின் பசியை போக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர் -குவியும் பாராட்டு!

கர்லா கட்டை சுற்றும் வீரராக கலக்கும் 76 வயது முதியவர்! – இளைஞர்களின் இன்ஸ்பிரேஷனாக மாறிய பண்டிட் ஸ்ரீதர் மிஸ்ரா!

கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை கடைபிடிப்பதில்லை!

வரும் தேர்தல் கடினமானதாக இருக்கும்! – தொண்டர்களுக்கு கார்த்தி சிதம்பரம் வாய்ஸ் மெசேஜ்!

முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை! – அண்ணாமலை சரமாரி கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகன விபத்தில் 10 வீரர்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது – பிரதமர் மோடி அதிரடி!

மதுராந்தகம் கூட்டம் என்டிஏ வெற்றியை உறுதி செய்யும் – ஜி.கே.வாசன் உறுதி!

உலகிலேயே இரண்டாவது நெரிசல் மிகுந்த நகரம் பெங்களூரு!

சர்வதேச அமைதி வாரியமாக மாறிய காசா அமைதி வாரியம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies