நாடு முழுவதும் ஜன்தன் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வங்கி கணக்கில் 56 சதவீதம் பெண்கள் தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
This is a significant milestone.
It is heartening to see that more than half of these accounts belong to our Nari Shakti. With 67% of accounts opened in rural and semi-urban areas, we are also ensuring that the benefits of financial inclusion reach every corner of our nation. https://t.co/sfZaNUOSts
— Narendra Modi (@narendramodi) August 19, 2023
இது குறித்து தனது எகஸ் பதவில்,
“இது ஒரு முக்கியமான முன்னேற்றம். இவற்றில் பாதிக்கும் அதிகமான கணக்குகள் நமது மகளிர் சக்திக்கு சொந்தமானவை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகர்ப்புறங்களில் 67% கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதால், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரப் பயன்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.