திருமலையில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம் -6 இடங்களில் கூண்டுகள் அமைப்பு
Aug 21, 2025, 04:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமலையில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம் -6 இடங்களில் கூண்டுகள் அமைப்பு

Web Desk by Web Desk
Aug 20, 2023, 03:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி திருமலை கோவிலுக்கு செல்லும் பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திருமலையில் பக்தர்கள் மலையேறி செல்லும் பாதைகளில் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் இருப்பதை அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதனிடையே கண்காணிப்பு கேமரா பதிவுகளில் சிறுத்தை , கரடிகள் நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே இவற்றைப் பிடிக்க 6 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் மலைப்பாதையில் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து, புதிய அறங்காவலராக பதவியேற்ற திருப்பதி சட்டமன்ற உறுப்பினரான கருணாகர் ரெட்டி, திருமலைக்கு மலையேறி செல்லும் பக்தர்களுக்குக்  கைத்தடி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினார்.

அலிபிரி மலைப்பாதையில் 7-வது மைல், லட்சுமி நரசிம்மர் கோயில் பகுதிகளில் 320 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை பீதியால் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளிலும் பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் மார்க்கத்தில் ‘எலிபஃன்ட் காட்’ பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா மூலம் வனத் துறையினர் கண்டறித்துள்ளனர். மேலும், திருமலையில் உள்ள இணை நிர்வாக அதிகாரி அலுவலகத்தின் பின்புறம் கரடி ஒன்றின் நடமாட்டத்தையும் அவர்கள் அறிந்துள்ளனர்.

இதுதவிர ஸ்ரீவாரி மெட்டு மார்க்கத்திலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதைக்  கண்காணிப்பு கேமரா பதிவு செய்துள்ளது. திருமலைக்குப் பக்தர்கள் செல்லும் வழிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து இவற்றைப் பிடிக்க 6 இடங்களில் கூண்டுகள் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags: cheetahandrapradeshthirupadhi
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி!

Next Post

உக்ரைன் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் – 7 பேர் பலி!

Related News

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி முதலமைச்சருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies