உரலார்... உலக்கையார்... உதயநிதிக்கு பதிலடி!
Sep 14, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உரலார்… உலக்கையார்… உதயநிதிக்கு பதிலடி!

சனாதனம் விவகாரத்தில் இலங்கை ஜெயராஜ் அதிரடி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 10:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இலக்கியவாதியும், சமய பேச்சாளருமான இலங்கை ஜெயராஜ், உரலார், உலக்கையார் பாணியில் வித்தியாசமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த, இடதுசாரி அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் மகனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவரது பேச்சு தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கக் கூடிய, இந்துக்கள், இந்து அமைப்புகள் மற்றும் ஆன்மிக அன்பர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உதயநிதிக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்திருக்கிறார். இது தவிர, உதயநிதி மீது அம்மாநிலத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், உதயநிதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, முக்கியப் பிரமுகர்கள் ஏராளமானோர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், உதயநிதிக்கு இலங்கையைச் சேர்ந்த இலக்கியம் மற்றும் சமயப் பேச்சாளரான கம்பவாரிதி ஜெயராஜ், உரலார்… உலக்கையார்… சல்லடையார் பாணியில், வித்தியாசமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

உரலார் கேள்வி: சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்களே?

உலக்கையார் பதில் : சுருக்கமாய்ச் சொன்னால் தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். சொல்கிறவர்களுக்குத் தர்மம் இடையூறு செய்கிறது போல. தர்மம் என்கின்ற இவர்களின் செயல்கள் அடங்க மறுக்கிறது. அதனால், ‘பிரேம்’ஐ உடைத்துவிட்டால் எல்லைகள் இன்றித் தாம் செயல்படலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். வரலாற்று அனுபவங்களை உணர மறுக்கும் இவர்தம்மை என்சொல்ல? முருகனை ஒழிக்க நினைத்த சூரன் தான் ஒழிந்து போனான். நரசிம்மரை ஒழிக்க நினைத்த இரணியன் தான் ஒழிந்து போனான். இராமனை ஒழிக்க நினைத்த இராவணன் தான் ஒழிந்து போனான். தர்மத்தை ஒழிக்க நினைக்கிறவர்கள் கதையெல்லாம் இப்படித்தான் முடியும்.

சல்லடையாரின் சலிப்பு: ‘தம்பிக்கு அனுபவம் போதாதுங்கோ! ஹீ..ஹீ.. ஹி…!’ என்று முடித்திருக்கிறார். இவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: srilankasanatan dharmaUdayanithiJeyaraj
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத் திட்டம் தொடக்கம்!

Next Post

உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies