மகளிர் இட ஒதுக்கீட்டை வள்ளலார் பாராட்டி இருப்பார்: பிரதமர் மோடி!
Aug 8, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் இட ஒதுக்கீட்டை வள்ளலார் பாராட்டி இருப்பார்: பிரதமர் மோடி!

இளைஞர்கள் தமிழ், சமஸ்கிருதத்திலும் புலமை பெற வேண்டும் என்று வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 5, 2023, 02:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வள்ளலார் இன்று உயிருடன் இருந்திருந்தால், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை பாராட்டியிருப்பார் என்று நம்புவதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மேலும், இளைஞர்கள் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்திலும் புலமை பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் வள்ளலாரின் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, “வள்ளலார் காலத்திற்கும் முன்னதாகவே சிந்தித்தவர். கடவுளைப் பற்றிய வள்ளலாரின் பார்வை மதங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவை.

இந்த உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் கடவுளின் அம்சத்தை கண்டவர். தெய்வீகப் பிணைப்பை மனிதர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வள்ளலார் உயிருடன் இருந்தால் இன்று நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை பாராட்டியிருப்பார் என்று நம்புகிறேன். மேலும், இளைஞர்கள் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற வேண்டும் என்று வள்ளலார் விரும்பினார்.

வள்ளலாரின் வார்த்தைகள், வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் எளிமையானவை. இதனால்தான், சிக்கலான ஆன்மிக ஞானக்கருத்துகளை எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்த முடிகிறது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நமது ஒட்டு மொத்த சிந்தனைக்கு வலுசேர்க்க காலமும் இடமும் கடந்த நமது கலாசார பன்முகத்தன்மைக்கு பொது இழையாக திகழ்கின்ற பெரும் ஞானிகளின் போதனைகள் பெரிதும் உதவுகின்றன.

அன்பு, இரக்கம், நீதி ஆகியவற்றை வலியுறுத்தும் அவரது போதனைகளை நாம் பரப்புவோம். வள்ளலாரின் இதயப்பூர்வமான சிந்தனைகள் தொடர்பாக நாம் கடினமாக உழைப்போம். ஒருவரும் பட்டினியுடனும் இல்லாதிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி வழங்குவோம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM Modivallalar
Share
Tweet
SendShare
Previous Post

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை!

Next Post

பழனியில் கோவில் ஊழியர் – பக்தர் மோதல் – நடந்தது என்ன?

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies