நாட்டின் முக்கிய பலமே பிரதமர் மோடிதான்: ஜெ.பி.நட்டா புகழாரம்!
Sep 22, 2026, 05:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் முக்கிய பலமே பிரதமர் மோடிதான்: ஜெ.பி.நட்டா புகழாரம்!

உலகத் தலைவர்களால் பாராட்டப்படுவதாகவும் உரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 6, 2023, 08:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் முக்கிய பலமே பிரதமர் மோடிதான். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகளாவிய அளவில் உயர்ந்திருக்கிறது. மேலும், உலகத் தலைவர்களால் பாராட்டப்படும் நபராக பிரதமர் மோடி வலம் வருகிறார் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

தெலங்கானா மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “நாம் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது, ​​தேசியப் பிரச்சனைகளை எழுப்புவதிலும், அவற்றைத் தீர்ப்பதிலும் நமது கட்சி வலுவாகவும், மற்றவர்களை விடவும் முன்னணியில் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எதிர்கட்சிகள் தேசிய, மாநில மற்றும் உள்ளூர் பிரச்சனைகளை முன்வைத்து வருகின்றன. ஆகவே, நம்மைப் பற்றியும், நமது அரசுகள் பற்றியும் பரப்பப்படும் அவதூறுகளை முறியடிக்கத் தெளிவான பதிலைத் தரத் தயாராக இருக்க வேண்டும்.

தெலங்கானாவில் உள்ள எந்தக் கிராமத்துக்கும் நமது நிர்வாகிகள் சென்று வளர்ச்சித் தேவைகளுக்கு பதில் சொல்லலாம் என்பதை தயக்கமின்றி என்னால் கூற முடியும். காரணம், தேசமும், தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்களும் பா.ஜ.க.வுக்குச் சாதகமாக உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் உழைத்துள்ளது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நமது வெற்றி தெலங்கானாவிலும் தெளிவாகத் தெரிகிறது.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் உலகளாவிய மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இது உலகத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுகிறது. மேலும், நாட்டின் பலமே நமது பிரதமர் நரேந்திர மோடிதான். பல்வேறு துறைகளில் உள்ள மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்கான பிரதமரின் தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத முயற்சிகள் நமது நாட்டிற்கு மேலும் மேலும் வலு சேர்க்கின்றன.

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டின் மக்கள்தொகையில் தோராயமாக 70 சதவீதத்தை கொண்டுள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முயற்சி இன்னும் தொடர்கிறது. இந்த 80 கோடி பயனாளிகளில் கிட்டத்தட்ட 2 கோடி பேர் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள். பிரதமர் மோடியின் தலைமையில், கடந்த 5 ஆண்டுகளில், 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: bjpJ.P.NaddaTelangana
Share
Tweet
SendShare
Previous Post

மதுபான கொள்கை வழக்கு: சஞ்சய்சிங்கிற்கு 5 நாள் நீதிமன்றக் காவல்!

Next Post

இந்து சமய அறநிலையத்துறையின் பிடியில் இருந்து கோவில்கள் விடுவிக்கப்பட வேண்டும்!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies