ரேபிட் எக்ஸ் இரயிலைப் பிரதமர் மோடி அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி வைக்கிறார்!
Jul 31, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரேபிட் எக்ஸ் இரயிலைப் பிரதமர் மோடி அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி வைக்கிறார்!

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 07:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து வழித்தட முனையத்தின் முன்னுரிமைப் பிரிவை பிரதமர் மோடி தொடங்கி  அக்டோபர் 20-ம் தேதி வைக்கிறார். சாஹிபாபாத்தை துஹாய் பணிமனையுடன் இணைக்கும் ரேபிட்எக்ஸ் ரயிலைக் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 20-ம் தேதி காலை 11:15 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் சாஹிபாபாத் ரேபிட்எக்ஸ் நிலையத்தில் டெல்லி – காசியாபாத் – மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  வழித்தட முனையத்தின்  முன்னுரிமைப் பிரிவைத் தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் பிராந்திய அதிவிரைவுப் போக்குவரத்து முறை தொடங்குவதைக் குறிக்கும் வகையில், சாஹிபாபாத்தை துஹாய் பணிமனையுடன் இணைக்கும் ரேபிட்எக்ஸ் ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

நண்பகல் 12 மணியளவில், சாஹிபாபாத்தில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கி, நாட்டில் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை  தொடங்கப்படுவதை முன்னிட்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார். மேலும், பெங்களூரு மெட்ரோவின் கிழக்கு மேற்கு முனையத்தின் இரண்டு பகுதிகளையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

டெல்லி – காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  வழித்தட  முனையம்

டெல்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து வழித்தட   முனையத்தின்  17 கிலோ மீட்டர் தொலைவிலான  முன்னுரிமைப் பிரிவு தொடங்கப்படும். இது காசியாபாத், குல்தார் மற்றும் துஹாய் நிலையங்கள் வழியே  சாஹிபாபாத்தை துஹாய் பணிமனையை இணைக்கும். டெல்லி – காசியாபாத் – மீரட் வழித்தடத்திற்கு 2019 மார்ச் 8-ம் தேதி பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

புதிய உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பிராந்திய இணைப்பை மாற்றுவதற்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, பிராந்திய அதி விரைவு போக்குவரத்து முறை திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது புதிய ரயில் அடிப்படையிலான, மிதமான அதிவேக போக்குவரத்து அமைப்பாகும்.

மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகம் என்ற வடிவமைப்புடன், பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை என்பது ஒரு மாற்று பிராந்திய மேம்பாட்டு முயற்சியாகும். இது நகரத்திற்குள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அதிவேக ரயில்களை இயக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தேவைக்கேற்ப ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் சேவை என்ற நிலைய எட்டமுடியும்.

தில்லியில் மொத்தம் எட்டு பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை  முனையங்களை உருவாக்க அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் டெல்லி – காசியாபாத் – மீரட் முனையங்கள் உட்பட மூன்று வழித்தடங்கள் முதல் கட்டத்தில் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன.

தில்லி – குருகிராம் -எஸ்.என்.பி – ஆல்வார் முனையம், மற்றும் தில்லி – பானிபட் முனையம். தில்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை  முனையம்  ரூ.30,000 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்படுகிறது.

மேலும் காசியாபாத், முராத்நகர் மற்றும் மோடிநகர் ஆகிய நகர்ப்புற மையங்கள் வழியாக செல்லும் பயண நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பயண நேரத்தில் தில்லியையும் மீரட்டையும் இணைக்கும்.

இத்தகைய மாற்றமான பிராந்திய நகர்வு தீர்வுகள் பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும்; வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுகாதார வாய்ப்புகளுக்கு மேம்பட்ட அணுகுமுறையை வழங்குதல் ;  வாகன நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டை கணிசமாகக் குறைக்க உதவுகிறது.

பெங்களூரு மெட்ரோ

பிரதமரால் நாட்டுக்கு முறைப்படி அர்ப்பணிக்கப்படும் இரண்டு மெட்ரோ பாதைகள் பையப்பனஹள்ளியை கிருஷ்ணராஜபுரா மற்றும் கெங்கேரி முதல் சல்லகட்டா வரை இணைக்கின்றன. முறையான தொடக்க நிகழ்ச்சிக்காக காத்திருக்காமல், இந்த முனையத்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கு வசதியாக இந்த இரண்டு மெட்ரோ வழித்தடங்களும் 2023 அக்டோபர் 9 முதல் பொது சேவைக்கு திறக்கப்பட்டன.

Tags: PM Modirapidx train
ShareTweetSendShare
Previous Post

வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸிடம்தான் இருக்கிறது: மத்திய அமைச்சர் தாக்கு!

Next Post

மிசோராம் தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies