இந்தியாவின் யுபிஐ: உலகளாவிய டிஜிட்டல் கட்டண முறைகளில் முன்னணி
Aug 8, 2026, 02:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் யுபிஐ: உலகளாவிய டிஜிட்டல் கட்டண முறைகளில் முன்னணி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 08:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 

இந்தியாவின் யுபிஐ உலகளாவிய டிஜிட்டல் கட்டண முறைகளில் முன்னணியில் உள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய தலைப்புச் செய்திகளில், இந்திய புத்தாக்கம் இடம் பெற்றிருந்தால், அது சந்தேகத்திற்கு இடமின்றி யுபிஐ கட்டண முறையாகத்தான் இருக்கும். இன்று, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணப்பரிவர்த்தனைகளிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. யுபிஐ முறையை 30 கோடிக்கும் அதிகமான தனிநபர்கள் மற்றும் 5 கோடிக்கும் அதிகமான வணிகர்கள் பயன்படுத்துகின்றனர்.

தெருவோர வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் யுபிஐ பயன்படுத்தப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு தரவுகளின்படி இன்று, உலகின் அனைத்து நாடுகளிலும், கிட்டத்தட்ட 46 சதவீதம் பங்கைக் கொண்டு, அதிக டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து பிரேசில், சீனா, தாய்லாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. 2016-இல் ஒரு மில்லியன் ஆக இருந்த யுபிஐ பரிவர்த்தனைகள், இப்போது 10 பில்லியன் (1,000 கோடிகள்) பரிவர்த்தனைகளைத் தாண்டியுள்ளது.

யுபிஐயின் வளர்ச்சியானது குறிப்பிடத்தக்க வகையில், பணம் செலுத்துவதற்கான பணப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், பிற டிஜிட்டல் கட்டண முறைகளுக்கும் மாற்றாக உள்ளது. உதாரணமாக, பணம் செலுத்துவதற்கான டெபிட் கார்டுகளின் பயன்பாடு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. யுபிஐ தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி வருவதால், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இது இன்னும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்.

டிஜிட்டல் கட்டண முறையின் வெற்றியானது, டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பின் வலிமையில் மட்டுமல்லாமல், ரொக்கப் பணத்திலிருந்து டிஜிட்டலுக்கு மாறுவதற்கு மக்களை ஊக்குவித்த நடத்தைத் தூண்டுதலிலும் பிரதிபலிக்கிறது.

கட்டணம் செலுத்தும் செயலிகளால் வழங்கப்படும் சிறிய குரல் பெட்டிகள் போன்ற சிறிய மற்றும் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் இதில் அடங்கும், இதில் க்யூஆர் குறியீடு மூலம் ஒவ்வொரு முறையும் எவ்வளவு பணம் உடனடியாகப் பெறப்பட்டது என்பதை குரல் தெரிவிக்கிறது. இது சிறு வணிகர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் மத்தியில் நீண்ட காலமாக ரொக்கப் பணப் பரிவர்த்தனையால் ஏற்படும் அவநம்பிக்கையைப் போக்க உதவியுள்ளது.

இந்தியாவின் வலுவான டிஜிட்டல் கட்டணச் சூழல் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. யுபிஐயின் உள்ளூர் வெற்றியைத் தொடர்ந்து, நாட்டிற்கு வெளியே பணம் செலுத்தும் முறையை எடுத்துச் செல்ல, 2020-ஆம் ஆண்டில் இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் என்ற ஒரு பிரிவை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அமைத்தது. அப்போதிருந்து, என்ஐபிஎல் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகளை விரிவுபடுத்த 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

சமீபத்திய காலங்களில், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகியவை யுபிஐ பரிமாற்ற அலைவரிசையில் இணைந்துள்ளன. பிரான்சில் யுபிஐ இன் நுழைவு குறிப்பிடத்தக்கது, இது முதல் முறையாக ஐரோப்பாவில் காலூன்ற உதவுகிறது. இப்போது ஆறு புதிய உறுப்பு நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் குழுவில் யுபிஐயின் விரிவாக்கத்திற்கு பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார்.

2016 இல் ஒரு சாதாரண தொடக்கத்தில் இருந்து, யுபிஐ தற்போது அடைந்துள்ள அற்புதமான வெற்றியின் அளவுக்கும் தாக்கத்துக்கும் ஒப்பீடே இல்லை என்பதே உண்மை.

Tags: Indiaupi
Share
Tweet
SendShare
Previous Post

ஒகேனக்கல்: காட்டு யானை சுட்டுக்கொலை – வேட்டை கும்பல் அட்டூழியம்

Next Post

மத்திய அரசுத் திட்டங்களை சீர்குலைக்க முயலும் கேரளா: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies