ராஜஸ்தான் குற்றங்களில்தான் முதலிடம் வகிக்கிறது: முதல்வர் யோகி!
Sep 12, 2026, 10:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தான் குற்றங்களில்தான் முதலிடம் வகிக்கிறது: முதல்வர் யோகி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 20, 2023, 05:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ராஜஸ்தான் மாநிலம் சுற்றுலா, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முதலிடம் வகித்தது. தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் குற்றங்களில் முதலிடம் வகிக்கிறது என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்திருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பா.ஜ.க. சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆம்பர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “5 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. அரசு ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி அடையும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.

குறிப்பாக, ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் என பார்த்துப் பார்த்து நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சுற்றுலா, வேலைவாய்ப்பு, மேம்பாடு ஆகியவற்றில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தது.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானின் நிலை என்ன? குற்றங்களில் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 55, 60 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை, பிரதமர் மோடி 9 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார்.

குறிப்பாக, இந்த 9 ஆண்டுகளில் 12 கோடி ஏழைகளுக்கு கழிப்பறை, 4 கோடி பேருக்கு வீடு, 4 கோடி பேருக்கு மின் இணைப்பு, 10 கோடி ஏழைகளுக்கு உஜ்வாலா யோஜனா இணைப்பு ஆகியவை கிடைத்திருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, காங்கிரஸ் ஆட்சியில் இராம நவமி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேசமயம், பா.ஜ.க.வின் இரட்டை இன்ஜின் அரசு, அயோத்தியில் இராமர் கோயிலைக் கட்டி இருக்கிறது” என்றார்.

Tags: uttar pradeshElectionCm Yogi AdityanathRajasthanCompaign
Share
Tweet
SendShare
Previous Post

கோவில் சொத்துக்கள் திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை!

Next Post

“ஒரே நாடு, ஒரே தேர்தலை”அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்! – ராம்நாத் கோவிந்த்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies