7 போலீஸார் கொலை வழக்கு: 19 ஆண்டுகளுக்குப் பிறகு 5 நக்சல்கள் கைது!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

7 போலீஸார் கொலை வழக்கு: 19 ஆண்டுகளுக்குப் பிறகு 5 நக்சல்கள் கைது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 9, 2024, 01:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகாவில் 7 போலீஸாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் உட்பட 5 நக்சல்களை ஆந்திராவில் போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திரா – கர்நாடக எல்லைப் பகுதிகளில் கடந்த 2005-ம் ஆண்டில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆகவே, நக்சல்களை ஒடுக்க கர்நாடக அரசு ‘நக்சல்கள் தடுப்புப் படை’ என்கிற பெயரில் தனிப் படையை அமைத்திருந்தது.

இந்த தனிப்படையினர், நக்சல்களை பிடிப்பதற்காக துமகூரு மாவட்டம், பாவகடா, வெங்கடம்மனஹள்ளியிலுள்ள ஒரு பள்ளி வளாகத்தில் 2005 பிப்ரவரி மாதம் முகாமிட்டிருந்தனர்.

அப்போது, பிப்ரவரி 11-ம் தேதி நள்ளிரவு லாரியில் வந்திறங்கிய நக்சல் கும்பல், தனிப்படை போலீஸார் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த போலீஸாரால், எதிர் தாக்குதல் நடத்த முடியவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்தில் 7 போலீஸாரும், அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியாகினர். பின்னர், போலீஸாரின் முகாமுக்குள் நுழைந்த நக்சல் கும்பல், போலீஸார் வைத்திருந்த அதிநவீன ஆயுதங்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றது.

இதையடுத்து,  இச்சம்பவம் தொடர்பாக பாவகடா போலீஸார் விசாரணை நடத்தி, 42 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு பாவகடா மற்றும் மதுகிரி நீதிமன்றத்தில் இன்றுவரை விசாரணை நடந்து வருகிறது.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பலருக்கும் ஜாமீன் இல்லாத பிடிவாரன்டை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இதன் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட பலரும் ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களை பாவகடா போலீஸார் கண்டுபிடித்து கைது செய்து வருன்றனர்.

இந்த நிலையில், ஆந்திராவில் இருந்த நாகராஜ், பத்மா, போய ஓபலேஷ், ராமமோகன், ஆஞ்சனேயலு ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்து பாவகடாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: karnatakaArrestAndraNaxals
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியத் துப்பாக்கிச்சுடு வீராங்கனை தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி!

Next Post

காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies