காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 9, 2024, 01:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகாவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஆள் சேர்ப்பில் முறைகேடு நடந்த புகாரில், அச்சங்கத்தின் தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நஞ்சே கவுடா வீடு, அலுவலகம், கல்குவாரி உட்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நஞ்சே கவுடா. இவர், ‘கோமுல்’ எனும் கோலார் – சிக்கபல்லாப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

இந்த சூழலில், மேற்படி சங்கத்தில் காலியாக இருந்த 179 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு அறிவிப்பு வெளியானது. இதன் பிறகு, கடந்த டிசம்பர் மாதம் 179 பணியிடங்களும் நிரப்பப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பட்டியல் வெளியானது.

இதையடுத்து, தேர்வு நடத்தாமலேயே பணம் வாங்கிக் கொண்டு 179 பேரையும் பணி நியமனம் செய்ததாக சங்கத் தலைவர் நஞ்சே கவுடா, இயக்குனர் அஸ்வத்நாராயணா பாபு, நிர்வாக இயக்குனர் கோபால்மூர்த்தி, நிர்வாக மேலாளர் நாகேஷ் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, முறைகேடு மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக மாலூர் அருகே கொம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள நஞ்சே கவுடாவின் வீடு, அவரது எம்.எல்.ஏ. அலுவலகம், அவருக்குச் சொந்தமான கல்குவாரி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும், நஞ்சேகவுடாவின் ஆதரவாளர் ஹரிஷ், சங்க இயக்குனர் அஸ்வத்நாராயணா பாபு, நிர்வாக இயக்குனர் கோபால்மூர்த்தி, நிர்வாக மேலாளர் நாகேஷ் ஆகியோரின் வீடுகள், கோலார் – சிக்கபல்லாப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகம் உட்பட 10 இடங்களிலும் இச்சோதனை நடைபெற்றது.

இச்சோதனையின்போது, நஞ்சே கவுடாவின் ஆதரவாளர்கள் அவரது வீட்டு முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இச்சோதனையில் சிக்கிய சில ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Tags: ED RAIDkarnatakaCongress MLA
Share
Tweet
SendShare
Previous Post

7 போலீஸார் கொலை வழக்கு: 19 ஆண்டுகளுக்குப் பிறகு 5 நக்சல்கள் கைது!

Next Post

அர்ஜூனா விருது பெற்ற செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies