2 மாதங்களில் 1,000 கேலோ இந்தியா மையங்கள்: அனுராக் தாக்கூர்!
Aug 2, 2026, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 மாதங்களில் 1,000 கேலோ இந்தியா மையங்கள்: அனுராக் தாக்கூர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 13, 2024, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், அடுத்த 2 மாதங்களில் நாடு முழுவதும் 1,000 கேலோ இந்தியா மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள யஷ்வந்த் ஸ்டேடியத்தில், “கஸ்தர் கிரிடா மஹோத்சவ்” என்கிற விளையாட்டு விழாவின் 6-வது நிகழ்ச்சியை மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “மத்திய அரசு விளையாட்டு பட்ஜெட்டை 800 கோடியில் இருந்து 3,200 கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. நாட்டிலுள்ள விளையாட்டு வீரர்களின் செயல்திறன் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டில் பெரிய அளவில் சாதனைகள் நிகழவில்லை. ஆனால், தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது. ஆகவே, கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், அடுத்த 2 மாதங்களில் நாடு முழுவதும் 1,000 கேலோ இந்தியா மையங்கள் அமைக்கப்படும்.

மகாராஷ்டிராவின் பாரம்பரிய விளையாட்டான மல்லகம்பா மற்றும் நாட்டின் பிற பாரம்பரிய விளையாட்டுகள் தேசிய மற்றும் கேலோ இந்தியா விளையாட்டுகளின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த பாரம்பரிய விளையாட்டுகளை சர்வதேச அளவில் கொண்டு சென்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், “கடந்த 5 ஆண்டுகளாக இந்த விளையாட்டு விழாவில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த 17 நாள் விளையாட்டுக் கொண்டாட்டம் நாக்பூர் நகரில் உள்ள 66 மைதானங்களில் 60 விளையாட்டுகளை உள்ளடக்கும். இந்த விளையாட்டு விழாவில், 1.35 கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிசுகளும் வழங்கப்படும்.

இந்த விளையாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் ஒரு வருடத்திற்கு காப்புறுதித் தொகையும் வழங்கப்படும்” என்றார்.

Tags: Anurag ThakurNitin GadkariNagpurCentral ministersKhasdar Krida Mahotsav
ShareTweetSendShare
Previous Post

மக்களே உஷார்! புதியவகை மோசடி!

Next Post

75-வது குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை!

Related News

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2,117 கோடி நிதி – முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்!

நிரம்பிய கபினி அணை; 12,000 கன அடி உபரிநீர் திறப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies