நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி : பாதுகாப்பு பணியில் 20,000 போலீசார்!
Jul 29, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி : பாதுகாப்பு பணியில் 20,000 போலீசார்!

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

பிரதமர் மோடி மார்ச் 4-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகம் வருகிறார். தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் நடைபெறும்  நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர்,  அங்கிருந்து தனி விமானம் மூலம்  மதியம் 1.15 மணி அளவில் சென்னை விமான நிலையம் வருகிறார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு செல்கிறார்.  அங்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரி பொருள் மறுசுழற்சி உலையை தொடங்கி வைக்கிறார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கல்பாக்கத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

பிறகு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி மாலை 4.30 மணியில் அளவில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.  மைதானத்திற்கு செல்கிறார். அங்கு  நடைபெறும்  பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.

இதில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். சென்னை வரும் பிரதமருக்கு தமிழக பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பிரதமர் வருகையையொட்டி சென்னை மாநகர் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னையில் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.வாகன சோதனையும் நடத்தப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வரையில் பிரதமர் மோடி காரில் பயணம் செல்வதால் அந்த வழித்தடத்தில் நாளை  பிற்பகலில் தீவிரமாகக் கண்காணிக்க போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags: pm chennai visitkalpakkamPM ModiChennaiannamalai
ShareTweetSendShare
Previous Post

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த அண்ணாமலை!

Next Post

தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies