WPL : மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி!
Sep 19, 2026, 08:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி!

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 12:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 16வது போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ஹேமலதா 74 ரன்களும், பெத் முனி 66 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க பாரதி 21 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக சைகா 2 விக்கெட்களை வீழ்த்தினார். இஸ்மாயில், சாஜனா, மேத்யூஸ், பூஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய யாஸ்திகா 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.

மற்றொரு தொடக்க வீராங்கனையான மேத்யூஸ் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மும்பை அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் 10 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என மொத்தமாக 48 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் 191 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இது மட்டுமின்று முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகி விருது 95 ரன்களை எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத்துக்கு வழங்கப்பட்டது.

Tags: WPL: Mumbai Indians qualified for the play-off round!
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த இளைஞர் – மீட்புப் பணிகள் தீவிரம்!

Next Post

சடலங்கள் விற்பனை : ரூ.3.66 கோடி வருவாய் ஈட்டிய கேரள அரசு!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies