ஹரியானா மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், பிரசாரம் நிறைவடைந்தது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. போட்டியை பொறுத்த வரை, பாஜக தனியாகவும், காங்கிரசும்-சிபிஎம் கட்சியும் ஒரு கூட்டணியாகவும், ஜனநாயக ஜனதா கட்சியும்-ஆசாத் சமாஜ் கட்சி ஒரு கூட்டணியாகவும் போட்டியிடுன்றன.
இந்திய தேசிய லோக் தளம்-பகுஜன் சமாஜ் கட்சி ஒரு கூட்டணியாகவும் களம் காண்கிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் பிரசாரம் நிறைவடைந்தது. முன்னதாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், பாதுகாப்புகள் குறித்த முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.