கிண்டி ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கும் பணிகள் - தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
Sep 14, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிண்டி ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கும் பணிகள் – தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 06:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைப்பதற்காக, அங்கு செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை ரேஸ் கிளப்பில், 147 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கோல்ஃப் மைதானத்தை மெட்ராஸ் ஜிம்கானா கிளப் நிர்வகித்து வருகிறது.

ரேஸ் கிளப்புக்கான குத்தகை உரிமை ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்குள்ள கோல்ஃப் மைதானத்தில் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டு வருவதால், அதற்கு தடை விதிக்கக் கோரி ஜிம்கானா கிளப் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், கோல்ஃப் மைதானத்துக்கு செல்லும் நுழைவாயிலை சீல் வைக்கும் முன் தங்கள் தரப்பு விளக்கத்தை தெரிவிக்க எந்த அவகாசம் வழங்கப்படவில்லை எனவும், மேலும் தமிழக அரசு நீர்நிலை அமைப்பதற்காக அப்பகுதியில் குழி தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான ஜிம்கானா கிளப் தரப்பு வழக்கறிஞர் கோல்ஃப் மைதானத்தில், 90 மீட்டர் அகலத்திற்கு 10 மீட்டர் ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளதாகவும், அதனால் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளதால் பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு நிலம் சென்னை ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள சூழலில், அந்த நிலத்தில் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என வழக்கு தொடர்வதற்கு ஜிம்கானா கிளப்புக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழக அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மேலும் ஜிம்கானா கிளப்பின் மனுவுக்கு அக்டோபர் 24ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags: madras high courtChennai Race ClubMadras Gymkhana ClubRace Club
Share
Tweet
SendShare
Previous Post

எல்லையோர கிராமங்களில் 4,406 கோடி மதிப்பில் சாலைப்பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!

Next Post

ஹரியானாவில் ஆட்சியமைக்கும் பாஜக – சுயேட்சை எம்எல்ஏக்களும் ஆதரவளிக்க முடிவு!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies