ஃபெஞ்சல் புயல் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பான்கள் கீழே சரிந்து விழுந்தன.
நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிக்னல் லைட்டுகளை கீழே விழுந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். மேலும், தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.