விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஃபெங்கல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடானது. குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள், கடை வீதிகள் மற்றும் உப்பளங்களை மழை நீர் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள் சேதமும் ஏற்பட்டது.
இந்நிலையில், மரக்காணம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களை அவர் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.