அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் - 6 முறை சாட்டையால் அடித்து போராட்டத்தை தொடங்கிய அண்ணாமலை!
Jul 29, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – 6 முறை சாட்டையால் அடித்து போராட்டத்தை தொடங்கிய அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Dec 27, 2024, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணாப்பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமையை கண்டித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் தன்னைத்தானே அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து  மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில்,மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும் தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை  காலணி அணிய மாட்டேன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும்  48 நாட்களுக்கு  விரதம் இருந்து அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், கோவையில் உள்ள வீட்டின் முன்பு 6 முறை சாட்டையால் அடித்து அண்ணாமலை தனது போராட்டத்தை தொடங்கினார். அப்போது வெற்றி வேல், வீரவேல் என பாஜக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது சாட்டையை தருமாறும் தாங்கும் அடித்து கொள்வதாக கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாட்டையடி தனக்காக அல்ல, சமூகத்தில் உள்ள அவலங்களுக்காக என தெரிவித்தார்.  இந்த போராட்டம் தனி மனித போராட்டம் அல்ல என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், திமுக ஆட்சியில் இருந்து அகலும் வரை காலணி அணியபோவதில்லை என தெரிவித்தார்.

“FIR வெளியானதன் மூலம் மாணவியின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவால் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுவதாகவும், எனவே பாஜக போராட்டத்தின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணாமலை கூறினார்.

கண் முன்னால் அடுத்த தலைமுறை அழித்து கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு இருக்கிறோம். கல்வியின் தரம் கீழே வர ஆரம்பித்து இருக்கிறது. போராக இருந்தாலும் கூட ஒரு பெண்ணின் மீது கை வைக்க கூடாது என்பது மண்ணின் மரபு. வரும் காலங்களில் போராட்டங்களை தீவிரப்படுத்த போகிறோம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

 

Tags: DMKAnna Universitytamilnadu governmentchennai policeAnna University campusstudent sexual assaultAnnamalai lashes himself with a whipஅண்ணாமலை சாட்டையடி போராட்டம்annamalai
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

பயணிகள் 7 கிலோவுக்கு மேல் கைகளில் சுமைகளை எடுத்துச் செல்லக்கூடாது – சிவில் விமான பாதுகாப்பு பணியகம் அறிவிப்பு!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies