ஈ.வெ.ராவை எதிர்ப்பது தான் இனி நாம் தமிழர் கட்சியின் சித்தாந்தம் என்றும்,திராவிடத்தை ஒழிப்பதே தனது கொள்கை எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் தாய் உங்களை படிக்க வைத்தாளா? என ஈ.வெ.ரா பேசவில்லையா? என கேள்வி எழுப்பினார். தமிழ் மொழியை சனியன் என விமர்சித்தவர் ஈ.வெ.ரா என்நும் அவர் கூறினார்.
தனது சொத்தை பாதுகாக்க 26 வயது பெண்ணை திருமணம் செய்தவர் பெரியார் என்றும் சீமான் விமர்சித்தார். ஈ.வெ.ரா-வையும், அம்பேத்கரையும் ஒப்பிடுவது எப்படி சரியாகும் என்றும் அவர் வினவினார்.
பிரபாகரனை சந்திக்கும் முன்பு வரை தானும் திராவிடம் என்னும் திருடர் கூட்டத்தில் இருந்ததாகவும், இனி நாதகவின் சித்தாந்தம் ஈ.வெ.ரா-வை எதிர்ப்பது தான் என்றும் சீமான் தெரிவித்தார்.