முருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை : ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!
Sep 22, 2026, 06:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை : ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 06:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடலூரில் 22 ஆண்டுகளுக்கு முன் நடந்த முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகேயுள்ள குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் முருகேசன், கடந்த 2003-ம் ஆண்டு மே 5-ம் தேதி மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கண்ணகி குடும்பத்தார் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, முருகேசன், கண்ணகியை வண்ணாங்குடிக்காடு மயானத்திற்குக் கடத்திச் சென்று காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றிக் கொலை செய்து எரித்தனர்.

கடந்த 2004-ஆம் ஆண்டு இந்தக் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த நிலையில், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ் மாறன் உட்பட 15 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பல ஆண்டுகளாகக் கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரர் மருது பாண்டி, கந்தவேலு, ஜோதி, மணி உட்பட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும், கண்ணகியின் அண்ணன் மருது பாண்டிக்கு மரண தண்டனையும், உடந்தையாகச் செயல்பட்ட மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  அதேபோல, வழக்கைச் சரியாக விசாரிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறைக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் ஆணையிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், மருது பாண்டியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதோடு 12 குற்றவாளிகளின் ஆயுள் தண்டனை உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

இதில், கண்ணகியின் உறவினரான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுதான்சு துலியா, குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்ததுடன், மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

Tags: உச்சநீதிமன்றம்ஆயுள் தண்டனைMurugesan - Kannagi honor killing: Supreme Court confirms life imprisonmentமுருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை
Share
Tweet
SendShare
Previous Post

ஆர்வம் காட்டாத வியாபாரிகள் : விலை வீழ்ச்சியால் ‘மா’ விவசாயிகள் வேதனை!

Next Post

பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை : மத்திய அரசு

Related News

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies