ரூ.3500-க்கு விலைபோன துரோகி : பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய BSF வீரர் சிக்கியது எப்படி?
Sep 17, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரூ.3500-க்கு விலைபோன துரோகி : பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய BSF வீரர் சிக்கியது எப்படி?

Murugesan M by Murugesan M
May 31, 2025, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மாதம் மூவாயிரத்து ஐநூறு ரூபாயை பெற்றுக்கொண்டு, இந்திய ராணுவத்தின் ரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் பகிர்ந்திருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எல்லை பாதுகாப்புப் படை வீரர் ராணுவ ரகசியங்களைப் பாகிஸ்தானிடம் பகிர்ந்தது குறித்தும், அவர் சிக்கியது குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 27 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியப் பெண்களின் குங்குமத்தை அழித்த தீவிரவாதிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷ் சிந்தூர் எனும் பெயரில் துல்லிய தாக்குதல் நடத்தி பாகிஸ்தானில் நூற்றுக்கும் அதிகமான பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் அழித்து ஒழித்தது.

பஹல்காம் தாக்குதல் நடத்துவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தின் ரகசியங்களையும், முக்கிய தகவல்களையும் பகிர்ந்ததாக மொதிராம் எனும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையின் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்த மோதி ராம் ஜாட் என்பவரோடு, சண்டிகரைச் சேர்ந்த முக்கிய தொலைக்காட்சியில் பணியாற்றும் பத்திரிகையாளர் எனக் கூறி பெண் ஒருவர் பழகியுள்ளார்.

ஆரம்பத்தில் சிறு, சிறு தகவல்களை மட்டும் கோரிய அப்பெண், அடுத்தடுத்த நாட்களில் மோதி ராமுடன் மிகவும் நெருக்கமாகியுள்ளார். தொலைப்பேசி உரையாடல்களும், வீடியோ கால்களும் அவர்களின் தொடர்பை மேலும் வலுவாக்கிய நிலையில், ராணுவத்தின் பல ரகசியத் தகவல்களையும் அப்பெண்ணிடம் மோதிராம் பகிரத் தொடங்கியுள்ளார்.

ஆனால் குறிப்பிட்ட பெண்ணின் நண்பர் என அடையாளம் காட்டப்பட்ட நபர் பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரி என்பதை அறியாத மோதிராம் அடுத்தடுத்த தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார்.

காலப்போக்கில் குறிப்பிட்ட பெண் மற்றொரு நபரை தன் நண்பர் என அறிமுகப்படுத்த, இந்திய ராணுவத்தின் முக்கியமான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் அவருக்கும் மோதிராம் பகிர்ந்திருக்கிறார்.

அதிலும் தீவிரவாதிகள் சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்திய இடமான பஹல்காமில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், ராணுவத் துருப்புகளின் நடமாட்டங்கள் மற்றும் உளவுத்துறையின் அறிக்கைகளையும் மோதிராம் பகிர்ந்திருப்பதைத் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையில் உறுதி செய்திருக்கிறது.

மேலும் மோதிராம் பகிர்ந்த தகவல்களுக்காக மாதம் தோறும் மூவாயிரத்து ஐநூறு ரூபாயும், 12 ஆயிரம் ரூபாய் போனஸாகவும் அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

மோதிராமின் தொலைப்பேசியைக் கைப்பற்றி விசாரணை செய்ததில் இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய அனைத்து விவரங்களும் அழிக்கப்படாமல் அப்படியே இருந்திருக்கிறது.

பஹல்காம் தாக்குதல் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக அங்கிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையிலும், அவர் தொடர்ந்து ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்குப் பகிர்ந்திருக்கிறார். அதிலும் உள்துறை அமைச்சரின் வருகை, சுற்றுலாத்தளங்கள் மூடப்பட்டது தொடர்பான விவரங்களை தொடர்ந்து அனுப்பியதை அவரின் தொலைப்பேசியில் உள்ள ஆவணங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மோதிராமின் நடவடிக்கைகளை அவருக்கே தெரியாமல்  ஒரு வாரத்திற்கும் மேலாக கண்காணித்த தேசிய புலனாய்வு அமைப்பு, தகுந்த ஆதாரங்களைச் சேகரித்த பின்பு அதிரடியாகக் கைது செய்திருக்கிறது. இந்த வழக்கில் மோதிராமுடன் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் இந்நிலையில், தேசத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரே ராணுவ ரகசியத்தை அண்டை நாட்டிற்குப் பகிர்ந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags: பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய BSF வீரர்Indiapakistanindian armyA traitor who cost Rs. 3500: How was the BSF soldier who turned spy for Pakistan caught?துரோகி
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Next Post

இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது : ஜெய்சங்கர்

Related News

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

இன்றைய தங்கம் விலை!

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies