அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!
Sep 8, 2026, 07:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

Murugesan M by Murugesan M
Aug 16, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இயந்திரங்களைத் துடைக்க மட்டுமே உதவும் துணிக்கழிவுகளை கொண்டு உருவ பொம்மைகளைச் செய்து வரும் தனியார் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. துணிக்கழிவுகளில் தயாரிக்கப்படும் உருவ பொம்மைகள் குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நகைக்கடைகளில் விதவிதமான நகைகளையும், துணிக்கடைகளில் பல ரகங்களில் துணிகளையும் அணிந்திருக்கும் மார்பளவு உருவ பொம்மைகளைப் பார்த்திருப்போம். பிளாஸ்டிக் அல்லது நைலான் பொருட்களால் செய்யப்பட்ட அந்த உருவ பொம்மைகள் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்காது என்பதோடு அவற்றை மறுசுழற்சியும் செய்ய முடியாது. இந்த நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக  துணிக்கழிவுகளை பயன்படுத்திப் பல வடிவங்களில் மேனிக்வின் உருவ பொம்மைகளைத் தயாரித்து வருகிறது திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனம்.

திருப்பூர் , ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வரும் ஏராளமான பின்னலாடை நிறுவனங்களில் இயந்திரங்களைத் துடைக்க மட்டுமே பயன்படுத்தப்படும் துணிக்கழிவுகளை சேகரித்து அதிலிருந்து மதிப்புள்ள காகிதத்தைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கிய இந்த தனியார் நிறுவனம், படிப்படியாகப் பல வண்ணங்களில் அவற்றைத் தயாரித்ததோடு அதன் மூலமாக இந்த உருவ பொம்மைகளையும் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.

துணிக்கழிவுகளின் மூலம் உருவாக்கப்படும் இந்த உருவ பொம்மைகள் மறுசுழற்சிக்கு உகந்தது என்பதோடு, மண்ணில் போட்டாலும் மூன்று மாதத்திற்குள் மக்கி மண்ணாகிவிடும் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்த விலையில் தயாரிக்கப்படும் இந்த உருவ பொம்மைகள் உள்நாடு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் தனது ஏற்றுமதியைச் செய்து வருகிறது

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த மேனிக்வின் வகை உருவ பொம்மைகள் மிகுந்த வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது. மழை நீர் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சாரம், கழிவுநீரைச் சுத்திகரிக்கும் இயந்திரம் என இன்னும் பல்வேறு வசதிகளுடன் இயங்கி வரும் இந்த தனியார் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.

 

Tags: Amazing business enterprise: Dolls made from fabric wasteதுணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்தொழில் நிறுவனம்சேலம்திருப்பூர்கரூர்ஈரோடு
Share
Tweet
SendShare
Previous Post

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

Next Post

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

Related News

பழனி மலைக்கோயில் சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி; சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; வானதி சீனிவாசன் கேள்வி

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

Load More

அண்மைச் செய்திகள்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies