தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?
Sep 8, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

Murugesan M by Murugesan M
Aug 16, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அலாஸ்காவில் ட்ரம்ப்-புதின் இடையேயான சந்திப்பு உக்ரைன் போர் நிறுத்த குறித்த எந்த அறிவிப்பும், அமைதி ஒப்பந்தமும் இல்லாமல் முடிந்திருக்கிறது. உக்ரைன் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்றால் இந்தியா மீது மேலும் அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா  எச்சரித்த நிலையில், இனி என்ன நடக்கும் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில், உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதனையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தன.  நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த, தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை ரஷ்யா  வழங்க முன்வந்தது. இந்த வாய்ப்பை விரைவாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா,  ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யத் தொடங்கியது.

அதுவரை ரஷ்யாவில் இருந்து வெறும் 2 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்து வந்த இந்தியா,படிப்படியாக 40 சதவீதத்துக்கும் அதிகமாக  இறக்குமதி செய்யத் தொடங்கியது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக்  காரணம் காட்டி, கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் இந்தியாவுக்கு ட்ரம்ப் 25 சதவீத வரி விதித்தார்.

தொடர்ந்து, ஆகஸ்ட் 6 ஆம் தேதி, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் இந்தியப் பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.  இந்தக் கூடுதல் வரி வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி,  அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வர்த்தகம் செய்யும் போது இந்தியா மீது மட்டும் வரி விதிப்பது நியாயமற்றது என்று கண்டனம் தெரிவித்த இந்தியா, தேசிய நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும்  கூறியுள்ளது.

மேலும், உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த இந்தியாவால் மேற்கொள்ளப்படும் ரஷ்யக் கச்சா எண்ணெய் இறக்குமதியை ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிரமாக ஊக்குவித்தது என்றும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக  அலாஸ்காவில் நடக்கும்  ட்ரம்ப்- புதின் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், இந்தியா மீதான 25 சதவீத இரண்டாம் நிலை வரி மேலும் அதிகரிக்கப்படும் என்று  அமெரிக்கக் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்திருந்தார்.

மேலும், இந்தியா மீதான இரண்டாம் நிலை வரியை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தையும்  வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.  ரஷ்யாவும் இந்தியாவும் இறந்த பொருளாதாரங்கள் என்றும், ரஷ்யாவுடனான எண்ணெய் மற்றும் ஆயுத வர்த்தகத்தை இந்தியா நிறுத்தவேண்டும் என்றும் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்திருந்தார். இவையெல்லாம், உக்ரைன் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை நிர்ப்பந்திக்க ட்ரம்ப் பயன்படுத்திய உத்திகள் ஆகும்.

இந்தியாவைத் தாக்கினால் ரஷ்யாவுக்கு வலிக்கும் என்பதை அறிந்த ட்ரம்ப், ரஷ்யாவைப் பேச்சுவார்த்தைக்கு வரவழைத்துவிட்டார். அதே நேரத்தில் அலாஸ்கா சந்திப்பின் மூலம்,சர்வதேச அளவில் இழந்த அங்கீகாரத்தை புதின் மீண்டும் ஏற்படுத்திக் கொண்டார். எந்த ஒப்பந்தமும் இல்லை- போர் நிறுத்த அறிவிப்பும் இல்லை. மேலும் எந்த உத்தரவாதத்தையும் புதினிடம் பெறாமல் வெறும் கையுடன் ட்ரம்ப் அமெரிக்காவுக்குத் திரும்பியிருக்கிறார்.

ஒரே கல்லில், உக்ரைனையும், ஐரோப்பிய நாடுகளையும் ஓரம்கட்டிவிட்டு, அமெரிக்காவுடன் ரஷ்யாவின்  நெருக்கத்தை உலகத்துக்குக் காட்டியுள்ளார் புதின். அலாஸ்கா பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படாத நிலையில், இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிக்குமா ? என்ற கேள்விகள் எழுப்பப் படுகின்றன.

உண்மையில், ரஷ்யாவுடன் அதிக வர்த்தகம் செய்யும் சீனா மீது அதிக வரிவிதிக்காமல் இந்தியாவை ட்ரம்ப் குறிவைத்ததற்குக் காரணமே வேறு. என்னதான் இருந்தாலும், சீனாவை விட இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவே ஆழமானது. சீனாவுக்கு வரிவிதிப்பாதல் ரஷ்யாவைப் பணிய வைக்க முடியாது என்பது ட்ரம்ப்புக்குத் தெரியும். ஆகவே தான் இந்தியாவை வைத்து ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுத்தார் ட்ரம்ப்.

ரஷ்ய அதிபர் புதினும் தனக்கே உரித்தான கணக்கில் அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசியுள்ளார். புதினை பொறுத்தவரை, உக்ரைன் தனி சுதந்திர நாடாகவும், நேட்டோ உறுப்பு நாடாகவும் இருக்கக் கூடாது. நேட்டோ அமைப்பே பலவீனமாக வேண்டும் என்பது தான் நோக்கம்.

ட்ரம்பை பொறுத்தவரை, உக்ரைனின் கனிமவளங்களில் புதினுக்கு பாதி, தனக்குப் பாதி என்பதே கணக்காக உள்ளது. இதில், இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில், ட்ரம்புடனான DEAL-யை புதின் வெற்றிகரமாக முடிப்பார் என்றே புவிசார் அரசியல்  வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Tags: தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்புஅலாஸ்காவில் ட்ரம்ப்-புதின் இடையேயான சந்திப்புIndiaஉக்ரைன் போர்Alaska meeting ends in failure: More taxes for India? What's next?
Share
Tweet
SendShare
Previous Post

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

Next Post

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

Related News

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி மலைக்கோயில் சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி; சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; வானதி சீனிவாசன் கேள்வி

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies