நீர் மேலாண்மையைப் பாழுங்குழியில் தள்ளிவிட்ட திமுக அரசுக்கு ஆட்சியில் தொடர என்ன தகுதி இருக்கிறது? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Sep 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீர் மேலாண்மையைப் பாழுங்குழியில் தள்ளிவிட்ட திமுக அரசுக்கு ஆட்சியில் தொடர என்ன தகுதி இருக்கிறது? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 05:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக அரசு, நெற்பயிர்களைத் தண்ணீரிலும், விவசாயிகளைக் கண்ணீரிலும் மிதக்கவிட்ட உள்ளது என்று என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஏரியில் இருந்து முறையான அறிவிப்பின்றி ஆளும் அரசு உபரி நீரைத் திறந்துவிட்டதால், 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதிலும் வயலா குளமா என்று தெரியாதளவிற்குப் பொங்கல் அறுவடைக்குக் காத்திருந்த நெற்பயிர்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ள காணொளியைக் காண்கையில் நமது நெஞ்சம் கனத்துப்போகிறது. சோழவரம் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கேவுள்ள கால்வாய்களை முறையாகத் தூர்வாரி சீரமைத்து இருந்தாலே, இத்தகைய பெரும் அசம்பாவிதத்தினை அரசு தடுத்திருக்கலாம்.

ஆனால், மழைநீர் வடிகால் பணிகளுக்குண்டான நிதியைக் கொள்ளையடித்துவிட்டுத் தமிழக விவாயிகளின் வயிற்றிலடித்த திமுக அரசுக்குத் தொலைநோக்குப் பார்வையும் இல்லை, மக்கள் நலன் குறித்த சிந்தனையும் இல்லை என்பதைத் தான் இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழகத்தின் நீர் மேலாண்மையைப் பாழுங்குழியில் தள்ளிவிட்டு அதன்மேல் தங்கள் விளம்பரங்களைக் கட்டமைக்கும் திமுக அரசுக்கு ஆட்சியில் தொடர என்ன தகுதி இருக்கிறது? எனவே, ஆட்சி முடியும் தருவாயிலாவது தமிழக விவசாயிகளுக்குத் திமுக செய்து வரும் தொடர் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

Tags: bjpDMKMK StalinNayanar Nagendran mlaWhat right does the DMK government have to continue in power after it has pushed water management into a shambles? - Nainar Nagendran questions
Share
Tweet
SendShare
Previous Post

வெற்றுப் பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின் நாணிக் குறுக வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Next Post

சவுதி அரேபியா சாலை விபத்தில் 42 இந்தியர்கள் பலி – ஒரே குடும்பத்தில் பறிபோன 18 உயிர்கள்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies