தோட்டக்கலைத் துறையில் தோண்டத் தோண்டப் பெருகும் ஊழல் ஊற்று - நயினார் நாகேந்திரன்
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தோட்டக்கலைத் துறையில் தோண்டத் தோண்டப் பெருகும் ஊழல் ஊற்று – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 07:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத் தோட்டக்கலைத்துறையின் கீழ் குறிப்பிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் எங்கே போயிற்று? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கடந்த ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், தோட்டக்கலை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை ஆதரிக்கும் நோக்கில் தமிழகத்திற்கு ரூ.136 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், அதில் திமுக அரசு கணிசமானத் தொகையைக் கையாடல் செய்துவிட்டதாகவும் வெளிவரும் செய்திகள் மூலம் திமுகவின் ஊழல் மகுடத்தில் இது மற்றொரு கருங்கல்லாகவே தெரிகிறது. தோட்டக்கலைத்துறை குறித்தெல்லாம் யார் கேள்வி கேட்கப் போகிறார்கள் என்ற அலட்சியத்தில் திமுக அரசு தனது ஊழல் கரங்களை அதில் பரவவிட்டுள்ளதாகத் தெரிகிறது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக அதிகாரிகளுக்கு உணவு கொடுத்தோம், தேநீர் வழங்கினோம், போக்குவரத்திற்கு உதவினோம் என்று கூறி போலிக் கணக்கு காட்டி ரூ.75 கோடியையும், தென்னை வேர் வாடல் நோய் தடுப்புப் திட்டத்தின் கீழ் ரூ.60 கோடியையும், தேனீ வளர்க்கிறோம், மகரந்தச் சேர்க்கை செய்கிறோம் என்று கூறி டெண்டரே விடாமல் ரூ.6 கோடியையும் அரசு ஊழல் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் வரிசை கட்டி நிற்கும் பொழுது, முதல்வரும் வேளாண்மைத் துறை அமைச்சர்  MRK பன்னீர்செல்வம் அவர்களும் இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத் தோட்டக்கலைத்துறையின் கீழ் குறிப்பிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் எங்கே போயிற்று? வாய் வலிக்குமளவிற்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்ற போலி வதந்தியை மக்களிடையே பரப்பிவரும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் கனத்த மௌனம் காப்பது ஏன்? பதவிக்காலம் முடிவதற்குள் பாதாளம் வரை சென்று கொள்ளையடித்துவிடத் துடிக்கும் திமுகவின் ஊழல் வரலாறு நமக்குத் தெரியாதா என்ன? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

எனவே, வழக்கம்போல வெள்ளை பேப்பரைத் தூக்கிக் காட்டி உருட்டாமல் தோட்டக்கலைத் துறையின் செலவினங்கள் மற்றும் டெண்டர் நடைமுறைகள் குறித்து விரிவான வெள்ளையறிக்கையை உடனே வெளியிட வேண்டுமென முதல்வர்  மு.க. ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

Tags: Corruption is a growing problem in the horticulture sector - Nayinar NagendranbjpnewsDMKTodayநயினார் நாகேந்திரன்
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி கார் குண்டு வெடிப்பு – 8 இடங்களில் என்ஐஏ சோதனை!

Next Post

WhatsApp பயன்படுத்த இனி சிம் கார்டு அவசியம் : சைபர் மோசடிகளை தடுக்க புதிய கட்டுப்பாடு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies