ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியல் - நாதக வேட்பாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது!
Sep 8, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியல் – நாதக வேட்பாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 22, 2026, 06:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் திருமுருகன் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வாக்காளர்களுக்கு தலா 3000 ரூபாய் வீதம் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மொத்தம் நால்வரை பிடித்து நாம் தமிழர் கட்சியினர் போலீசில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் புகார் தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஒரத்தநாடு புதூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது திமுக வேட்பாளர் தரப்பில் பணம் விநியோகிப்பதை தடுக்கத் தவறியதாக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மறியல் காரணமாக தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின்னும் மறியலை கைவிட மறுத்ததையடுத்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமுருகன் உட்பட 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

முன்னதாக ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் சிலர் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தபோது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்கள் விரட்டிச் சென்று கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் தேர்தல் பறக்கும் படையினரிடம் அவர்களை ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். திமுக வேட்பாளர் வைத்திலிங்கம் வாக்காளர்களுக்கு மூன்றாயிரம் ரூபாய் வரை தருவதாகவும், எனவே அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Tags: Assembly Elections Tamil Nadutamil nadu assembly election 20262026 tamil nadu assembly nadu election trendstamil nadu election updatesdmk cash distributionNaam Tamilar katchiOrathanaduTamil Nadu Assembly elections.tamil nadu assembly elections 2026
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

Next Post

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

Related News

பழனி மலைக்கோயில் சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி; சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; வானதி சீனிவாசன் கேள்வி

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies