சட்டப்பேரவை தேர்தலில் 85% வாக்குகள் பதிவு; கரூர் முதலிடம்
Sep 8, 2026, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் 85% வாக்குகள் பதிவு; கரூர் முதலிடம்

Manikandan by Manikandan
Apr 23, 2026, 09:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், நிலவரப்படி 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுகிகளிலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த போதிலும், வாக்குச்சாவடியில் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு அதிகாரிகள் டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதித்தனர்.

இத்தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை விட 20 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவானது தெரியவந்துள்ளது. இதனிடையே, வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வேட்பாளர்களின் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் 90.64 சதவீத வாக்குகளும், தருமபுரி மாவட்டத்தில் 90.13 சதவீத வாக்குகளும், ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத வாக்குகளும், நாமக்கல் மாவட்டத்தில் 89.94 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.4சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

Tags: tamilnaduelection resultassembly electionpolling daypolling booth
Share
Tweet
SendShare
Previous Post

ஓசூர் அருகே, ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்ல வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை!

Next Post

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Related News

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் ; 3 அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்; விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் சமர்பிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

5 தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

பழனி மலைக்கோயில் சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி; சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; வானதி சீனிவாசன் கேள்வி

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies