குதிரை பேர புகாரில் அமைச்சர் ஆனந்த் மற்றும் முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீது சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய உள்துறை அமைச்சகம், தேர்தல் ஆணையம், சிபிஐ, தமிழக அரசு மற்றும் தமிழக சபாநாயகர் ஆகியோர் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறி அமைச்சர் ஆனந்த் மற்றும் 4 முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குதிரை பேரத்தில் ஈடுபடுவதை தடுக்க உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரமான பிரிவு 142-ஐ பயன்படுத்தி கடுமையான புதிய விதிகளை உருவாக்க வேண்டும் எனவும்
அதுவரை குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் 4 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் தனது மனுவில் வழக்கறிஞர் சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
















