முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் செய்த செயல் அநாகரிகமானது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அமைந்தகரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு காலத்தில் நேர்மையாக இருந்து கம்யூ. கட்சி தலைவர்கள் தற்போது சந்தர்ப்பவாதியாகி விட்டதாக தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் சினிமா போன்று வசனம் பேசியது ஒரு அநாகரிகமான செயல் என்றும், மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் நடந்து கொள்வது தகுதி இழப்பை காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
















