முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !
Sep 27, 2026, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 25, 2026, 11:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 18 இடங்களில் அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும், திருவண்ணாமலை தென்மாத்தூர் பகுதியில் உள்ள வீடு மற்றும் அருணை கல்லூரி வளாகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, கல்லூரி வளாகத்திற்குள் வெளிநபர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கரூரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. அரசு ஒப்பந்ததாரரும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பருமான சங்கர் ஆனந்த் இல்லத்தில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஒருவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சத்யா நகரைச் சேர்ந்த ராஜசேகரனின் மகன் கண்ணன், மதுரை நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு மீது கமிஷன் மற்றும் பணி நியமன முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பழனி நகர் பகுதியில் ஓய்வுபெற்ற கோட்டப் பொறியாளர் சத்தியபாமாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி. தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் பணியில் இருந்தபோது, கரூரில் சாலை அமைப்பதற்கான நில அளவீட்டு பணிகளில் சுமார் 3 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சத்தியபாமா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், முறைகேடாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags: tiruvannamalaidisproportionate assets case.Directorate of Vigilance and Anti-Corruption.former DMK Minister E.V. Velu.
Share
Tweet
SendShare
Previous Post

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

Next Post

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies