ஆட்சியில் பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் பெருந்தன்மையா? - அண்ணன் திருமாவுக்கு தவெக எம்எல்ஏ கேள்வி!
Sep 27, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்சியில் பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் பெருந்தன்மையா? – அண்ணன் திருமாவுக்கு தவெக எம்எல்ஏ கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2026, 01:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆட்சியில் பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் மரபார்ந்த பெருந்தன்மையா? என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு தவெக எம்எல்ஏ முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது:  அன்பின் திருவுருவம் அறிவின் மறு உருவம் என்று பெயர் பெற்ற அண்ணன் தொல்.திருமாவுக்கு அன்பையும் அறிவையும் மழையாகப் பொழியும் நீங்கள் மரபு குறித்தும் மாண்பு குறித்தும் பாடம் எடுக்கத் தகுதியானவரே.

மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. மாச்சர்யமோ ஆச்சர்யமோ கொள்ள மனமில்லை. அடராழ் அரசியல் பயணம் உங்களுடையது. அது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், அண்ணா…நீங்கள், வாளும் வார்த்தையும் வீச வேண்டிய திசை எது என்று அறியாமல் திகைத்து நிற்பது ஏன் அண்ணா?.

சட்டசபையில் Evil குறித்துப் பேசியது உலகத்தின் காதுகளிலேயே விழுந்தது. உங்கள் காதுகளை அது எட்டவில்லையே. ஏன் அண்ணா?.

தற்குறி என்றெல்லாம் சபைக்கு வரும் வெளிவாயிலில் நின்று வன்ம கோஷம் பாடியது வாழ்த்துக்குரிய செயல் என்று எண்ணிவிட்டீர்களோ அண்ணா?. வாயத் தொறங்க சி.எம் என்று அட்டை ஏந்தி நின்றதை அரசியல் அறமென்று எண்ணி விட்டீர்களோ அண்ணா?.

வக்கற்றவர் என்று முதல்வர் மீது வஞ்சம் கொண்டு வசை பாடியது உங்களுக்கு வாஞ்சை மொழியாகத் தெரிகிறதா அண்ணா?. ஷோஃபா மாடல் என்று சுத்தப் பொய்ச் சூத்திரம் சொல்லி உங்களையும் அந்த அவதூறுப் பட்டியலில் சேர்த்தது அகமகிழச் செய்யும் செயலா அண்ணா?.

எங்கள் தயவில் ஆட்சி நடத்துகிறீர்கள். எங்கள் வாக்குகளில் ஆட்சி நடத்துகிறீர்கள் என்றெல்லாம் சொல்லிவிட்டு, இதுவும் எங்கள் ஆட்சிதான் என்று எகத்தாளம் பேசியது அரசியல் மாண்பின் இலக்கணமா அண்ணா?.

அறிவார்ந்த ஜனநாயக அரசியலா அண்ணா?. புதிய இலக்கணப் புணர்ச்சி விதி கூறியவர்கள் எல்லாம் புத்தாக்க அரசியல் புரிதல் கொண்டவர்களா அண்ணா?. 65சதவீதம் பேர் எதிராக வாக்களித்தனர். ஆகவே, இந்த வெற்றி ஜனநாயகமற்றது எனபது போன்று மடமைப் பொங்கல் வைத்தது மகத்தான ஜனநாயகப் புரிதலா அண்ணா?.

ஆயிக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான உயிர்களின் வாழ்வாதாரமான ஒரு தொழிலை அவமானகரமாக ஆக்கிப் பேசியது அறம்நிறைந்த அரசியலா அண்ணா?. அயிட்டம் சாங் போட்டாலும் போடுவார்கள் என்று பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது கொள்கை அரசியலா அண்ணா?.

மக்கள் தீர்ப்புக்கு எதிராக எதற்கெடுத்தாலும் எங்கள் தலைவர் தயவால் ஆட்சி நடத்துகிறீர்கள் என்று பொறாமையில் பொய் சொன்னால் ‘எங்கே அவர்?’ என்று கேட்பது இயல்புநிலை இல்லையா அண்ணா?. சாமானியர்களின் சமூக நீதி அரசின் மீது சகதி வீசுவதை சரி என்கிறீர்களா அண்ணா?.

ஜனநாயகம் காக்கும் சக்திகளைச் சகட்டுமேனிக்குச் சங்கடப்படுத்திப் பேசுவது சங்கத்தமிழ் அரசியல் மரபா அண்ணா?. பிளாஸ்டிக் சேர் போட்டவர்களின் பிளாஸ்டிக் அரசியல் பிதற்றலை இன்னுமா உணரவில்லை அண்ணா?. எல்லை தாண்டி விமர்சிப்பவர்களை, ஏசுபவர்களை, ஏகடியம் பேசுபவர்களை, உச்சமாக ஏளனம் செய்பவர்களை குறிப்பால் உணர வைப்பதுகூட குற்றமா அண்ணா?.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தரம் தாழ்ந்து பேசுவதுதான் தத்துவ அரசியலா அண்ணா?. தன்னைக் கடுமையாக விமர்சித்தவர்கள் என்றாலும் தானாகத் தேடிச் சென்ற மனதை தாங்கள் அறியாமல் இருப்பது ஏன் அண்ணா?. பெற்றோர் வைத்த பெயரைச் சொல்லிவிட்டு, பட்டப்பெயரைச் சொல்லாமல் விட்டதற்காக வருந்திய உள்ளத்தை நீங்கள் வருத்தப்படுத்தியது ஏன் அண்ணா?.

மாண்பு காக்கும் மரபார்ந்த சபையில், தன் மீது ‘ஏய்’ என்று ஒருமையில் வாய்க்கொழுப்பில் சொல்லெறிந்த போதும் அமைதியாகப் புன்சிரிப்பை உதிர்த்தபடி நின்ற உள்ளத்தின் மீது உக்கிரமான சொல் எறிய உங்களுக்கு மனம் வந்தது எப்படி அண்ணா?. ‘வக்கற்ற’, ‘டம்மி’ என்றெல்லாம் வகைதொகை இல்லாமல் பேசுவோர் மீது ஒரு வார்த்தைக்கூட உதிர்க்காமல் இருப்பதுதான் அரசியல் உத்தமமா அண்ணா?.

ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பது எங்கள் தாரக மந்திரம் என்று சொல்லும் நீங்கள் அதைச் சாத்தியப்படுத்திய ஜனநாயக உள்ளத்தின் மீது சகதி வீசுவோரைக் கண்டிக்காததுதான் சத்திய அரசியலா அண்ணா?. ‘எங்கள் கூட்டணியில் யாரும் இல்லை’ என்று திருமண வீடுகளில்கூட திட்டித் தீர்ப்பவர்களின் குரலாக எங்கள் மக்கள் தலைவர் ஆட்சியின் அங்கமாக பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் மரபார்ந்த பெருந்தன்மையா அண்ணா?. மதிப்பிற்குரிய அண்ணா எது மரபு?? என முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: TVK MLA MUSTHAFAVijayvcktvktirumavalavan
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்ட பணி டெண்டர்கள் ரத்து – சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

Next Post

ஆதாரங்கள் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை – அமைச்சர் ராஜ்மோகன்

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies