மீண்டும் பற்றி எரியும் வளைகுடா : குவைத், பஹ்ரைனை குறிவைத்த ஈரான் - சிறப்பு கட்’டுரை!
Jun 30, 2026, 09:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் பற்றி எரியும் வளைகுடா : குவைத், பஹ்ரைனை குறிவைத்த ஈரான் – சிறப்பு கட்’டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 30, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும், மத்திய கிழக்கில் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை மீண்டும் சிதறியுள்ளது. அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பதிலுக்குப் பதில் தாக்கி வருவதால், வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு நடப்பது என்ன? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…

ஈரான், அமெரிக்கா போர் 3 மாதங்களுக்குப் பின் நிறுத்தப்பட்டு, ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல்கள் கடந்து செல்கின்றன. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வரத்து ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

இந்தியாவை சேர்ந்த சரக்கு கப்பல்களும் கச்சா எண்ணெயுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணித்து வரும் நிலையில், நம் நாட்டிலும் எரிபொருள் விநியோகம் விரைவில் சீராகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பைத் தகர்க்கும் விதமாக மீண்டும் வளைகுடாவில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் கிடங்குகள், கடலோர ரேடார் மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதும், அதற்கு சில மணி நேரங்களிலேயே ஈரான் பதிலடி கொடுத்ததும்தான் இதற்கு காரணம்.

ஈரானின் புரட்சிகர காவல் படையானது, தனது கடற்படை மற்றும் விண்வெளிப் பிரிவுடன் இணைந்து, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஒருங்கிணைந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளது.

குவைத்தில் உள்ள அலி அல் சலேம் விமானத் தளமும், பஹ்ரைனில் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளமாக செயல்படும் பகுதிகளும் தாக்குதலின் இலக்காக இருந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, பஹ்ரைனில் வான்வழி எச்சரிக்கை சைரன்கள் இடைவிடாமல் ஒலிக்கப்பட்டன.

குவைத் பாதுகாப்புப் படைகள், தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் இரண்டு ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக அறிவித்துள்ளன. முதல் கட்ட தகவலின்படி, அமெரிக்க ராணுவத்தினருக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், பெரிய அளவிலான சேதமும் பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலுக்கு பின்னர், கடும் எச்சரிக்கையையும் ஈரான் விடுத்துள்ளது. “அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு இனி நரகம்தான் காத்திருக்கிறது” என்று ஈரான் புரட்சிகர காவல் படை வெளிப்படையாக எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், தூதரக பேச்சுவார்த்தைகளே முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.

மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை இன்னும் தீவிரமாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மோதலால் வளைகுடா நாடுகள் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எண்ணெய் கப்பல்கள் அதிகம் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணை மீதான அச்சமும் மீண்டும் அதிகரித்துள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இந்தப் பகுதி பதற்றத்தில் இருப்பதால், சர்வதேச பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அமெரிக்கா, ஈரான் போர் நிரந்தரமாக முடிவுக்கு வர வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், அமெரிக்காவின் தாக்குதலும், அதற்கு ஈரானின் பதிலடியும் பதற்றத்தை இன்னமும் அதிகரித்திருக்கின்றன. ஏற்கெனவே போரால் ஏறத்தாழ 3 மாதங்கள் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டு, விலைவாசி உயர்ந்தது.

இந்தச் சூழலில், அமெரிக்கா, ஈரான் இடையிலான இந்த மோதல் இரு நாடுகளுக்குள் மட்டும் இருக்குமா? அல்லது, ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தையும் பாதிக்குமா? என்பதே உலக நாடுகளின் மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளது.

Tags: iran war newsus iran war liveiran war updateiran war latestisrael us iran waramerica vs iran warIran Targets KuwaitBahrain.iran warStrait of HormuzIran-US war
ShareTweetSendShare
Previous Post

திருப்போரூர் அருகே வைகோ செய்தியாளர் சந்திப்பின் போது வாக்குவாதம் : செய்தியாளரை அடிக்கப்பாய்ந்த மதிமுகவினர்!

Related News

திருப்போரூர் அருகே வைகோ செய்தியாளர் சந்திப்பின் போது வாக்குவாதம் : செய்தியாளரை அடிக்கப்பாய்ந்த மதிமுகவினர்!

பராசக்தி பட சம்பள பாக்கி ரூ.8 கோடியை வழங்க உத்தரவிட வேண்டும் – இயக்குநர் சுதா கொங்குரா வழக்கு!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த 11, 526 கோடி – அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு?

ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஸ்ரீதர் வேம்பு

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை – மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை!

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு – கைதானவர்களுக்கு ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என அயோத்தி வழக்கறிஞர் சங்கம் தீர்மானம்!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் பற்றி எரியும் வளைகுடா : குவைத், பஹ்ரைனை குறிவைத்த ஈரான் – சிறப்பு கட்’டுரை!

இன்றைய தங்கம் விலை!

நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகித்த தவெகவினர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் – காடேஸ்வரா சுப்பிரமணியம் நம்பிக்கை!

வளர்ந்த இந்தியா 2047 இலக்கை நோக்கி தமிழக வளர்ச்சியை நிர்ணயிக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – ஜப்பானை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரேசில்!

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய குழு – திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு கலைப்பு!

சட்டப்பேரவை தேர்தலில் திமுக 6,000 கோடி செலவு செய்தும் வெல்ல முடியவில்லை – துரை வைகோ

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும் – வைகோ தகவல்!

தவெக கூட்டணியில் முன்பே சேர்ந்து விட்டோம் – காதர் மொய்தீன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies