புதிய பதவிகளை ஏற்க மறுப்பு - எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்!
Aug 5, 2026, 04:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய பதவிகளை ஏற்க மறுப்பு – எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 1, 2026, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுகவில் தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பை ஏற்க மறுத்து எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் மீண்டும் நியமிக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், சி.வி.சண்முகத்திற்கு எந்தப் பதவியும் வழங்கப்படாமல் ஒதுக்கிவைத்தது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் உறுதியளித்தபடி கட்சிப் பதவிகளில் இருந்து விலக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அவர்கள் வகித்த பதவியை வழங்காததால், கடந்த 50 நாட்களாக நிர்வாகிகள், தொண்டர்கள் சாரை சாரையாக கட்சியில் இருந்து விலகி, தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருவதாக அக்கடிதத்தில் கூறியுள்ளனர்.

நீங்கள் எடுத்த தவறான முடிவுகளால் 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல்களில் தொடர் தோல்வி ஏற்பட்டு, கட்சி கரைந்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 25ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி தாங்கள் வழங்கியுள்ள கட்சிப் பதவிகளை ஏற்று கட்சிப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள இயலாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாகவும், தாங்கள் நியமித்த பதவிகள் தங்களுக்கு வேண்டாம் என்றும், தாங்கள் கட்சி உறுப்பினர்களாக இருந்து செயல்படுவதாகவும் அந்தக் கடிதத்தில்
நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

Tags: S.P. Velumaniadmk spilitepsEdappadi PalaniswamiNatham ViswanathanThangamani
ShareTweetSendShare
Previous Post

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஊழல் – பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என ஆதவ் அர்ஜூனா அழைப்பு!

Next Post

அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி – இபிஎஸ் பேச்சு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies