பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம் : META மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு - சிறப்பு கட்டுரை!
Sep 17, 2026, 07:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம் : META மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 1, 2026, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் பதிவு தவறுதலாக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனம் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் மீதான மத்திய அரசின் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நீட் வினாத்தாள் கசிவு தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை முன் வைத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் மாதம் முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாணவர்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி இரண்டு செல்ஃபி வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதை தனது பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.

முதலில் கடந்த ஜூலை 23ம் தேதி இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு பின்னர் ஃபேஸ்புக்கிலும் பகிரப்பட்ட அந்தப் பதிவு இளைஞர்களை நோக்கிய பிரதமர் மோடியின் முதல் நேரடி ‘செல்ஃபி’ வீடியோவாக அமைந்திருந்தது. அவற்றில் ஒரு வீடியோ திடீரென நீக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

உடனடியாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் மெட்டா நிறுவனத்தின் உலகளாவியப் பொதுக் கொள்கைத் தலைவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. இந்தியாவில் உள்ள முக்கியப் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் கணக்குகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாது என்றும் உறுதி அளிக்குமாறு மெட்டாவிடம் மத்திய அரசு உரிய விளக்கம் கேட்கப்பட்டது.

பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் வீடியோ பதிவு தற்காலிகமாக நீக்கப்பட்டதற்குத் தங்களின் தானியங்கி AI-சார்ந்த உள்ளடக்கக் கண்காணிப்பு அமைப்புகளே (automated AI-based moderation systems) காரணம் என்றும், பிரதமரின் பதிவு தவறுதலாக நீக்கப்பட்டதாக ஒப்புக் கொண்ட மெட்டா நிறுவனம் அதற்கான விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டுள்ளது.

முக்கியப் பிரமுகர்களின் கணக்குகளில் பதிவிடப்படும் உள்ளடக்கங்களுக்கான உள் ஆய்வு நடைமுறைகளை வலுப்படுத்தி வருவதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தானியங்கி அமைப்புகளை மட்டுமே நம்பியிருக்காமல், இனி முக்கியத் தலைவர்கள் மற்றும் பிரபலங்களில் கணக்குகள் தொடர்பான உள்ளடக்கங்கள் கூடுதல் மனித மேற்பார்வைக்கு உட்படுத்தப்படும் என்றும் எந்தவொரு முடிவும் இறுதி செய்யப்படுவதற்கு முன், மூத்த அதிகாரிகளின் பார்வைக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தப்படும் என்றும் மெட்டா கூறியுள்ளது.

மெட்டாவின் விளக்கங்களால் மத்திய அரசு முழு திருப்தி அடையவில்லை என்று கூறப்படும் நிலையில் இவ்விவகாரம் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், நிறுவனத்தின் ஆரம்பக்கட்ட பதிலால் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடவில்லை என்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அதிகமாக விவாதிக்க வேண்டி இருப்பதால், ஒருவாரத்துக்குள் மெட்டா நிறுவனப் பிரதிநிதிகள் நேரில் ஆஜராகும்படி, அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு கண்டிப்புடன் கூறியுள்ளது.

எனவே இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கவும், நிறுவனத்தின் திருத்தப்பட்ட அணுகுமுறையை விளக்கவும் மெட்டா நிறுவனப் பிரதிநிதிகள் ஒரு வாரத்துக்குள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளைச் சந்திப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு தவறு நிகழ்ந்ததை மெட்டா ஒப்புக்கொண்டதை அரசு பாராட்டுவதாகவும், அதேவேளையில் இந்தச் சம்பவத்திற்கு இட்டுச் சென்ற சூழல் குறித்த விரிவான விளக்கத்தை எதிர்பார்ப்பதாகவும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags: central governmentmettaPrime Minister Modi's Facebook postmdoi video removed issue
Share
Tweet
SendShare
Previous Post

வரி மற்றும் போட்டி சலுகை உறுதி அளித்தால் மட்டுமே அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அமல் : இந்தியா திட்டவட்டம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

நிரம்பிய கபினி அணை; 12,000 கன அடி உபரிநீர் திறப்பு

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

Load More

அண்மைச் செய்திகள்

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies