தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக எம்.பிக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்த நிலையில், திமுக, அதிமுக புறக்கணித்துள்ளன.
தொகுதி மறுவரையறை பணிகளால் தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி எம்.பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்குமாறு தமிழக எம்.பிக்களுக்கு தனித்தனி கடிதம் மூலம் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளா்ர். எந்தவொரு ஆலோசனைக் கூட்டமாக இருந்தாலும் கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுப்பது மரபாக இருக்கும் நிலையில், முதலமைச்சர் விஜய் எம்.பி-க்களுக்கு தனித்தனியாக கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது… இதனிடையே முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தை திமுக, அதிமுக புறக்கணித்துள்ளன
















