மேகதாது விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர், தமிழக வாகன ஓட்டிகளுக்கு பூக்களை கொடுத்து காதில் வைத்துக் கொள்ளுங்கள் என்றுகூறி அத்துமீறலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர், சாம்ராஜ்நகர், கொள்ளேகால் ஆகிய பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்படுகிறது.
அதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோவில், மார்த்தாண்டம், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கர்நாடக மாநில அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் மேகதாது அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக – தமிழக எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் நடத்தின.
அப்போது தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்திய கன்னட அமைப்புகள், வாகன ஓட்டுனர்களுக்கு பூக்களை கொடுத்து காதில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கோஷமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு ஈரோடு மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















