உலகக் கோப்பை கிரிக்கெட் தேதி மாற்றம்: டிக்கெட் விற்பனை 25ம் தேதி தொடக்கம்
Sep 4, 2026, 11:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் தேதி மாற்றம்: டிக்கெட் விற்பனை 25ம் தேதி தொடக்கம்

Murugesan M by Murugesan M
Aug 10, 2023, 12:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி, உள்ளிட்ட 9 ஆட்டங்களின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகின்ற 25ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது.

இப்போட்டிக்கான அட்டவணை கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியிடப்பட்டது. அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஆனால் போட்டி அட்டவணை வெளியான சில நாட்களிலேயே பாதுகாப்பு அம்சங்கள் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட ஆட்டங்களின் தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கையை எழுந்தது.

இதற்கிடையே, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 9 ஆட்டங்களின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

போட்டி நடைபெறும் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினம் நவராத்திரி விழா தொடங்குவதால் இந்தப் போட்டி நடக்கும் பகுதிக்குப் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அந்த ஆட்டம் ஒரு நாள் முன்னதாக அதாவது அக்டோபர் 14ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில், உலக கோப்பைக் கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. அன்று இந்திய அணி அல்லாத மற்ற ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய அணி மோதும் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை கிடைக்கும். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 15-ம் தேதி விற்கப்படும்.

கிரிக்கெட் இரசிகர்கள் உலக கோப்பை இணையதளத்தில் வரும் 15-ம் தேதி முதல் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டால், அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலிலேயே தெரிவிக்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

Tags: CricketIndiaindia teamworld Cup CricketWorld Cup
Share
Tweet
SendShare
Previous Post

குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Next Post

பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக திடீர் கலைப்பு!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies