5 ஆண்டுகளில் 36,000 இணைய முகவரிகள் முடக்கம்!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 ஆண்டுகளில் 36,000 இணைய முகவரிகள் முடக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 04:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2023 ஆம் ஆண்டின் அக்டோபர் வரை 7,502 இணைய முகவரிகளை மத்திய அரசு முடங்கியுள்ளது.

2018 முதல் 2023 அக்டோபர் மாதம் வரை சமூக ஊடக நிறுவனங்களில் 36,838 இணைய முகவரிகளை பிளாக் செய்யுமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது என அத்துறையின் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், “தகவல் தொழில்நுட்பம் சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ், நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு அல்லது பொது ஒழுங்கை சீர் குலைக்கும் விதமான அல்லது குற்றங்களைத் தூண்டும் விதமான பதிவுகள் கொண்ட இணையதளங்கள் முடிக்கப்படுகின்றன என அமைச்சர் ராஜீவ் கூறியுள்ளார்.

ட்விட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் பதிவுகள், கணக்குகள் அல்லது ஹேஷ்டேகுகளை பிளாக் செய்ய அல்லது அகற்ற மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளின் விவரங்களை பகிருமாறு ஜான் பிரிட்டாஸ் கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், 2018 முதல் இந்த ஆண்டு அக்டோபர் வரை, அதிகபட்சமாக ட்விட்டர் சமூக வலைத்தள நிறுவனத்துக்கு மத்திய அரசு 13,660 உத்தரவுகளை அனுப்பியுள்ளது என்று கூறினார்.

2018 ஆம் ஆண்டு 224 உத்தரவுகள் அனுப்பப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு 1041 ஆகவும், 2020 ஆம் ஆண்டு 2,731 ஆகவும், 2021 ஆம் ஆண்டு 2,851 ஆகவும், 2022 ஆம் ஆண்டு 3,423 ஆகவும் கூடியுள்ளது. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் வரை 3,390 உத்தரவுகள் ட்விட்டருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

2018 முதல் இந்த ஆண்டு அக்டோபர் வரை, பேஸ்புக்கிற்கு 10,197 உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராமுக்கு 3,023 உத்தரவுகளும், யூடியூப்பிற்கு 5,759 உத்தரவுகளும் பிற சமூக ஊடகங்களுக்கு 4,199 உத்தரவுகளும் அனுப்பப்பபட்டுள்ளன என்று அமைச்சர் ராஜீவ் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவில் இணையம் பாதுகாப்பாகவும், நம்பகமானதாகவும் இருப்பதையும் அனைத்து பயனர்களும் பொறுப்புணர்வுடன் இருப்பதையும் உறுதி செய்வதுதான் அரசின் கொள்கை” என்று ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

Tags: IndiaRajiv Chandrasekharinternetwebsiteblock
Share
Tweet
SendShare
Previous Post

பெண்ணின் கண்களிலிருந்து நீக்கப்பட்ட 60 உயிருள்ள புழுக்கள்!

Next Post

கிரிக்கெட் : நவம்பர் மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies