நம்பிக்கையின் மற்றொரு சிறந்த மையமாக கல்கி தாம் உருவெடுக்கும் : பிரதமர் மோடி
Jul 30, 2026, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நம்பிக்கையின் மற்றொரு சிறந்த மையமாக கல்கி தாம் உருவெடுக்கும் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Feb 19, 2024, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் புனித யாத்திரை தலங்களுடன், ஹைடெக் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் ஸ்ரீ கல்கி தாம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, மற்றொரு புனித ஸ்தலத்திற்கு அடித்தளம் அமைக்கப்படுகிறது. இப்போது உங்கள் அனைவரின் முன்னிலையில் பிரமாண்டமான கல்கி தாம் கோயிலுக்கு  அடிக்கல் நாட்டும் பாக்கியம் கிடைத்துள்ளது. இந்திய நம்பிக்கையின் மற்றொரு சிறந்த மையமாக கல்கி தாம் உருவெடுக்கும் என்று  நம்புகிறேன் என தெரிவித்தார்.

அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு புதிய பயணம் தொடங்கும் என்றும், கல்கிதான் அதன் போக்கை நிர்ணயிக்கும் என்றும் கூறினார்.

ஜனவரி 22 முதல் ஒரு புதிய காலம் தொடங்கியுள்ளது. பகவான் ஸ்ரீ ராமர் ஆண்டபோது, அவரது செல்வாக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்தது. அதேபோல், ராம் லல்லாவின் அரியணை மூலம், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு ஒரு புதிய பயணம் தொடங்குகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

ராமரைப் போலவே, கல்கியின் அவதாரமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் போக்கைத் தீர்மானிக்கும். கல்கி காலத்தின் சுழற்சியில் மாற்றத்தைத் தொடங்குபவர் என்றும் மோடி தெரிவித்தார்.

தோல்வியில் இருந்து வெற்றியை மீட்டெடுக்கும் தேசம் இந்தியா. பலநூறு ஆண்டுகளாக நாம் தாக்கப்பட்டோம். வேறு எந்த நாடாக இருந்தாலும், வேறு எந்த சமுதாயமாக இருந்தாலும், தொடர்ச்சியான தாக்குதல்களால் அது அழிந்திருக்கும். ஆனாலும் நாம் வலுவாக நிற்கிறோம்.

சிலர் எனக்காக மட்டுமே விட்டுச் சென்ற பல நல்ல பணிகள் உள்ளன. எதிர்காலத்தில் எந்த நல்ல பணி மிச்சமிருந்தாலும், மகான்கள் மற்றும் மக்களின் ஆசியுடன் அதை முடிப்போம்” என்று பிரதமர் தெரிவித்தார்.

இன்று ஒருபுறம் நமது புனித யாத்திரை தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன, மறுபுறம் ஹைடெக் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது. இன்று கோவில்கள் கட்டப்படும் அதேவேளையில், நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன எனறும் மோடி குறிப்பிட்டார்.

இன்று சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாள். எனவே இந்த நாள் இன்னும்  புனிதமானதாகவும், ஊக்கமளிக்கும் நாளாகவும் மாறுகிறது. இன்று, நாட்டில் நாம் காணும் கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் நம் அடையாளத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம்,

இந்த உத்வேகம் சத்ரபதி சிவாஜி மகாராஜிடமிருந்து மட்டுமே நமக்கு கிடைக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், சத்ரபதி சிவாஜி மகாராஜின் காலடியில் எனது மரியாதையை செலுத்துகிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: Narendra ModiModiprime ministerShri Kalki Dham
ShareTweetSendShare
Previous Post

வெற்று அறிவிப்புகளையே இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவித்துள்ளது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

புதுமை கண்டுபிடிப்புகள் மக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies