கனமழை எதிரொலியாக சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ள நிலையில், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதன் எதிரொலியாக, சென்னையில், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுபோல, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்றும், நாளையும், நாளை மறுநாளும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.