புயல் காரணமாக, புதுச்சேரியில் இருந்து சென்னை மற்றும் காரைக்கால் செல்லக்கூடிய அரசு பேருந்துகள் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் எதிரொலியால், புதுச்சேரியில் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், புதுச்சேரியில் இருந்து சென்னை, காரைக்கால், பெங்களூர் செல்லக்கூடிய, 25க்கும் மேற்பட்ட புதுச்சேரி அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், அரசு பேருந்துகள் அனைத்தும் போக்குவரத்து கழக பனிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வந்த பிறகே பேருந்துகள் இயக்கப்படும் என புதுச்சேரி போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.