ஃபெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் அவசர உதவிகளுக்கு தமிழக பாஜக தலைமை அலுவலமான கமலாலயத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. சில பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் அவசர உதவிகளுக்காக பாஜக தலைமை அலுவலமான கமலாலயத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தேவைப்படுவோர் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் :
1. 9150021835
2. 9150021832