கடலூர் அடுத்த பெரிய உச்சிமேடு மகாலட்சுமி நகரில் குடியிருப்புகளில் சிக்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
ஃபெஞ்சல் புயல் எதிரொலி காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக உச்சிமேடு மகாலட்சுமி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் பேரிடர் மீட்பு படையினர் ரப்பர் படகு மூலம் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்
கடலூர் மாவட்டத்தில் காலை 8.30 மணி வரை பெய்த மழை அளவு (மி.மீ)
1. கடலூர் – 235.5
2. கலெக்டர் அலுவலகம் – 213.2
3. வானமாதேவி – 185.0
4. SRC குடிதாங்கி – 175.0
5. பண்ருட்டி – 140.0
6. காட்டுமயிலூர் – 110.0
7. விருத்தாசலம் – 87.0
8. குப்பநத்தம் – 85.8
9. மீ-மாத்தூர் – 80.0
10. வடக்குத்து – 79.0
11. வேப்பூர் – 75.0
12. பரங்கிப்பேட்டை – 70.9
13. ஸ்ரீமுஷ்ணம் – 68.3
14. குறிஞ்சிப்பாடி – 65.0
15. லக்கூர் – 61.2
16. அண்ணாமலைநகர் – 60.2
17. சிதம்பரம் – 51.5
18. தொழுதூர் – 51.0
19. கே.எம்.கோயில் – 48.0
20. கீழச்செருவாய் – 45.4
21. சேத்தியாதோப் – 45.2
22. புவனகிரி – 41.0
23. கொத்தவாச்சேரி – 40.0
24. பெல்லாந்துறை – 38.8
25. லால்பேட்டை – 22.0
மொத்தம் – 2174.00 மி.மீ
சராசரி – 86.96 மிமீ