சபரிமலையில் கனமழை பெய்த நிலையில், கொட்டும் மழையிலும் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைகளை முன்னிட்டு நடை திறக்கப்பட்ட நிலையில், தினசரி 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த இரு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்றும் சரங்குத்தி வரை பக்தர்களின் வரிசை நீண்டு காணப்பட்டது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அதன் தாக்கம் கேரளாவிலும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சபரிமலையில் கனமழை பெய்த நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.